அத்தி வரதர் விழா – ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். காரணம் என்ன?

athi-varadhar

கடந்த ஒன்றேகால் மாதத்திற்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவம் நடைபெற்று வருகிறது. அத்தி வரதரை காண அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்து செல்கின்றனர். நாடு முழுவதிலும் இருந்து இந்த அரிய கோவிலுக்கு தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அத்தி வரதர் கோயில் வைபவத்திற்கு வருகின்ற பக்தர் கூட்டத்தை நெறிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஈடுபட்டுள்ளது. மேலும் அத்தி வரதர் தரிசனத்திற்கு இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி தரிசனம் போன்ற பல வகையான தசைகள் முறைகள் ஏற்படுத்தப்பட்டு அந்த தரிசனம் வழி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அத்தி வரதர் தரிசனம் செய்ய கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்தி வரதர் தரிசனம் காண வரும் இலவச தரிசன பக்தர்களில் சிலர் நெடுந்தொலைவிலிருந்து வருவதாலும், சிலர் உடல்நல குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாலும் மீது இரக்கம் கொண்டு சில காவல் துறையினர் கட்டண மற்றும் வி. ஐ. பி தரிசன வழியாகவே சீக்கிரம் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு அவ்வப்போது அனுமதித்து வந்தனர். அப்படி ஒரு காவல்துறை அதிகாரி சில பக்தர்களை வி.ஐ.பி தரிசன வழியாக சீக்கிரம் அத்தி வரதர் தரிசனம் செய்ய அனுமதி அளித்தார்.

people

அந்நேரத்தில் அங்கு ஆய்வுக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இதை நேரில் பார்த்த பிறகு, அந்த காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் கண்டபடி திட்டியதோடு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தினார். இந்தக் காட்சி சில நபர்களால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

- Advertisement -

kanchipuram collector

இந்த காணொளி காட்சி பலராலும் பார்க்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தபோதும் இந்த விடயம் பற்றி அறிந்த மனித உரிமை ஆணையம் பொதுமக்கள் முன்னிலையில் பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரியை திட்டியது மனித உரிமை மீறல் என்றும், அப்படி செய்த மாவட்ட ஆட்சியரின் மீது துறை ரீதியாக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை குறித்து தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் விளக்கம் அளிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
ஆடி மாதத்தில் இவற்றை செய்தால் லாபங்களை பெறலாம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar police incident in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Kanchipuram collector in Tamil or Athi varadhar vizha in Tamil.