இன்று அத்தி வரதர் தரிசனத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் – மேலும் பல முக்கிய தகவல்கள்

athi-varadhan
- Advertisement -

வேண்டியவர்களுக்கு வரங்களைத் தரும் வரதராஜ பெருமாள் என்கிற பெயரில் திருமால் அருள்புரியும் கோயில் தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆகும். முற்காலத்தில் இந்தக் கோவிலின் மூலவர் சிலையாக பிரம்ம தேவரால் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் சிலையே இருந்தது எனவும் பல காரணங்களால் அத்திவரதர் சிலை மாற்றப்பட்டு, அதே போன்ற ஒரு சிலை மூலவராக வைத்து வழிபடபட்டது. பல அதிசயங்களை தன்னுள்ளே கொண்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகின்ற அந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த மேலும் சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியான காரணங்களினால் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த திருக்குளத்தில் அத்திவரதர் சிலை கிடத்தப்பட்டு பல ஆண்டுகாலம் மாற்று வரதராஜர் விக்ரமே மூலவராக வைத்து வழிபடப் பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1703 ஆம் ஆண்டு வரதராஜப்பெருமாள் கோயில் குளம் முழுமையாக வற்றிய போது பல ஆண்டு காலம் யாரும் அறியப்படாமல் இருந்த அத்திவரதர் சிலையை குளத்தின் மண்டபத்திற்கு அடியில் இருக்கும் பாதாள அறையில் கண்டெடுத்தனர்.

- Advertisement -

அப்போது இது குறித்து அந்த கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரை குளத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து, ஒரு மண்டல காலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைத்து விடலாம் என்ற வழக்கத்தை நடைமுறைப் படுத்தலாம் என்று முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பல ஆண்டுகாலம் செய்யப்பட்ட இந்த வைபவம் கடந்த நூற்றாண்டில் 1937 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.

athi varadhar

21 ஆம் நூற்றாண்டின் முதல் அத்திவரதர் வைபவமாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி வரை பக்தர்கள் அத்தி வரதராஜரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க அபூர்வ அத்திவரதர் தரிசனத்தை காண்பதற்கு இன்று இறுதி தினம் என்பதால் வழக்கத்திற்கும் அதிகமான மக்கள் கூட்ட நெருக்கடி காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் காணப்படுகிறது.

- Advertisement -

people

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் அத்தி வரத தரிசனத்திற்கு பொது தரிசன வழியில் காத்திருக்கும் நபர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. கோவிலின் கிழக்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் மூத்த குடிமக்கள் குறைந்த பட்சம் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதே போன்று இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் ஒரு வரிசையிலும் 4 மணி நேரம் காத்திருந்து அத்தி வரதர் தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு சொந்த வீடு, வாகனம் அமைய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar queue in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar festival in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.

- Advertisement -