உங்களுடைய அவசர தேவைக்கு, தேவையான பணம் உடனே உங்கள் கையை வந்து சேரும். ஒரே ஒரு முறை, பணம் வேண்டும் என்று, கல் உப்பிடம் இப்படி கேட்டு தான் பாருங்களேன்!

uppu

இன்றைய சூழ்நிலையில் பணம் வேண்டும் என்று யார், யாரைப் போய் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள். காரணம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. செய்வதற்கு வேலை கிடையாது. நிறைய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் வருமானத்தையும் இழந்து தவித்து வரும் சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் இயற்கை நமக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்து, நமக்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.

cash

நிச்சயமாக இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் எல்லோருக்குமே பணத்தட்டுப்பாடு என்பது இருக்கத்தான் செய்கின்றது. காரணம் லாக் டவுன். அவசர தேவைக்காக உங்களுக்கு அவசரமாக ஒரு தொகை தேவைப்படுகிறது. ஆனால் கையில் பணம் இல்லை. அந்த பணம் ஏதாவது ஒரு வகையில் நம் கையை வந்து அடைய தாந்திரீக ரீதியாக சுலபமான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் உங்கள் கைகளாலேயே ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து போட்டு கரைக்கவேண்டும். ஸ்பூனில் உப்பை எடுத்து போடக்கூடாது. உங்கள் கையால்தான் கல் உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கரைத்து விடுங்கள்.

money4

இந்த கண்ணாடி டம்ளரில் ஒரு மஞ்சள் நிற துணியை போட்டு மூடி விடுங்கள். அந்த மஞ்சள் துணிக்கு மேலே ஏதாவது ஒரு இரும்பு பொருளை வைக்கவேண்டும். வெயிட் இல்லாத இரும்பு பொருளை வையுங்கள். இல்லையென்றால் அந்தத் துணிக்கு மேல் வைக்கும் இரும்புப் பொருள் அப்படியே தண்ணீரில் மூழ்கிவிடும். இல்லையென்றால் அந்த மஞ்சள் துணியை கண்ணாடி தம்ளரில் ஒரு முடிச்சுப் போட்டோ, ரப்பர் பேண்ட் போட்டோ வழியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சவுகரியம்.

- Advertisement -

அந்த மஞ்சள் துணியின் மேல் ஒரு சேஃப்டி பின், குண்டூசி அல்லது சிறிய இரும்பு சாவி, ஏதாவது ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது கோரிக்கையை அந்த கல்லுப்பு நிறைந்து தண்ணீர் இடம் வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் தேவைக்கு நீங்கள் கேட்கக்கூடிய பணம் உங்களுடைய தகுதிக்கு உரியதாக இருக்கவேண்டும்.

நம்முடைய தகுதியை மீறி 5 கோடி வேண்டும் 10 கோடி வேண்டும் என்றெல்லாம் கேட்டால் நிச்சயமாக நடக்காது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த மாதத்தை நடத்தி செல்ல 10,000 வேண்டும், அவசரத் தேவைக்கு 2000 வேண்டும் என்று வைக்கக்கூடிய வேண்டுதல் நிச்சயமாகப் பலிக்கும்.

savings-money

மீண்டும் மீண்டும் சொல்வது தான், பரிகாரங்கள் நீங்கள் செய்யக்கூடிய வேளைகளில் வரக்கூடிய தடைகளை குறைப்பதற்கு தான். முயற்சிகளே எடுக்காமல், வெறும் பரிகாரத்தை செய்து விட்டு பணம் உங்கள் கையில் வந்து அமர வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறான ஒரு விஷயம். உங்களுடைய முயற்சிகளை செய்து கொண்டே வாருங்கள். உடன் சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய முயற்சிகள் சீக்கிரமே வெற்றியடையும். சீக்கிரம் பணம் உங்கள் கையை வந்து சேரும்.

pin

பரிகாரத்தை முடித்துவிட்டு அடுத்த நாள் இந்த தண்ணீரை கால் படாத இடங்களில் ஊற்றி விடலாம். மேலே உள்ள இரும்பு பொருளை எடுத்து உங்களுடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த வேண்டுதலை வைத்து வெகு சில நாட்களிலேயே அதாவது குறைந்தது 5 நாளில் இருந்து 10 நாட்களுக்குள் உங்களுடைய தேவை நிறைவேற வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.