வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் வெறும் தக்காளி வெங்காயம் மட்டும் வைத்து இந்த சுவையான குஸ்கா பிரியாணியை சட்டென செய்து கொடுங்கள். தட்டில் வைத்த சாதம் முழுவதும் ஒரு பருக்கை கூட இல்லாமல் தீர்ந்துவிடும்

kuska
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மதியவேளை வந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி இன்று என்ன குழம்பு. இவ்வாறான கேள்விக்கு பதிலாக ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்மணிகளும் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு என்று பதில் கூறுவர். ஆனால் இந்த குழம்பு வகைகள் எவ்வளவு சுவையாக சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவை சலிப்பாக தான் தோன்றும். ஏனென்றால் தினமும் ஒவ்வொரு நாளும் இதே குழம்புகளை தான் மாறி மாறி செய்து கொடுக்கின்றனர்.

எனவே வீட்டில் காய்கறி இல்லை என்றாலும் நினைத்த உடனே செய்யக்கூடிய இந்த குஸ்கா பிரியாணியை இப்படி செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுத்தால் அனைவரும் முகம் சுளிக்காமல் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். வாருங்கள் இந்த எளிமையான குட்கா பிரியாணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 400 கிராம், தயிர் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி – அரை கைப்பிடி, புதினா – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 150 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பிரியாணி இலை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பட்டை சிறிய துண்டு – 1.

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் 150 கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரியாணி மசாலாக்கள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். பிறகு 200 கிராம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு இந்த கலவை ஒரு கொதி வந்ததும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற பதத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் 400 கிராம் பிரியாணி அரிசியை சேர்த்து, ஒருமுறை கலந்து விட்டு, குக்கரை மூடி வேக விடவேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் குக்கர் விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, 7 நிமிடம் வேகவிட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான குஸ்கா பிரியாணி உடனே தயாராகி விட்டது.

- Advertisement -