பிரியாணி டேஸ்டில் இப்படி சுவையான குஸ்கா செய்ய ஆசையா? அப்போது உடனே இந்த மசாலாவை அரைத்திடுங்கள்

kuskka
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுவை பிடிக்கும். ஆனால் பிரியாணி என்று சொல்லிப் பாருங்கள். அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பிறக்கும். அந்த அளவிற்கு பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். பிரியாணி என்று சொன்னால் போதும் அன்றைய தினம் வீட்டில் பரபரப்பாகவே இருக்கும். எப்பொழுது பிரியாணியை செய்து முடிப்பது, எப்போது சாப்பிடுவது என்று அனைவருக்கும் தோன்றும். அதிலும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பிரியாணி என்று சொல்லி விட்டால் அன்றைய தினம் தயாராகி விட்டதா என்று நொடிக்கு நொடி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க பிரியாணியின் சுவையில், கறி சேர்க்காமல் இப்படி பிளைன் குஸ்கா செய்து பாருங்கள். கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே பிரியாணியின் சுவையில் இருக்கும். இதனை செய்வதற்கு இந்த ரகசிய மசாலாவை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். வாருங்கள் இந்த குஸ்காவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 3 டம்ளர், வெங்காயம் – 5, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 5, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புதினா தழை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, எண்ணெய் 5 – ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பிரியாணி இலை – இரண்டு, ஜாதிபத்திரி – ஒன்று, அன்னாசிப்பூ – ஒன்று, ஏலக்காய் – ஒன்று, தயிர் – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, ஏலக்காய் – 10 கிராம், பட்டை – 10 கிராம், கிராம்பு – பத்து கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, சம அளவுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு டப்பாவில் மாற்றி, மூடி வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு மூன்று டம்ளர் அரிசியை இரண்டு முறை கழுவி, விட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதனுடன் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பாதி அளவு கொத்தமல்லி, புதினா தழை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு தக்காளியை சேர்த்து தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -