கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள் | Black rice benefits in Tamil

black rice benefits in Tamil
- Advertisement -

கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள் – Black rice benefits in Tamil

நம் இந்திய நாட்டில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்களின் பிரதான உணவு தானியமாக திகழ்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு அரிசியை சாப்பிடுவதால் ஒவ்வொரு வகையான உடல் நலன் சார்ந்த பலன்களை நாம் பெறலாம். அந்த வகையில் மிகவும் பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசி குறித்தும், அந்த அரிசியை நாம் உணவாக செய்து சாப்பிடுவதால், நமக்கு ஏற்படக்கூடிய உடல் நலன் சார்ந்த நன்மைகள் என்ன என்பது குறித்தும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Benefits of Kavuni Rice Tamil

கருப்பு கவுனி அரிசி ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு அரிசி வகை என கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய மற்றும் சீன நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இந்த அரிசி வகை பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய சீன சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருக்கின்ற அரச குடும்பத்தினர் மட்டுமே இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட உரிமை பெற்றவர்கள் எனவும், சாமானியர்கள் இந்த வகை அரிசியை உணவாக செய்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது எனவும் வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு நேர்மாறாக இந்திய நாட்டில் இந்த கருப்பு கவனி அரிசி பலதரப்பட்ட சமூக மக்களாலும் விரும்பி உண்ணப் பட்டது எனவும் கூறப்படுகின்றது.

- Advertisement -

கருப்பு கவுனி அரிசி நன்மைகள் – Karuppu Kavuni Rice Benefits in Tamil

நோய் எதிர்ப்பு சக்திக்கு கருப்பு கவுனி அரிசி: மற்ற எந்த அரிசியைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பு கவுனி அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும், மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறப்பாக இருக்கும் எனவும் மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

Karuppu kavuni arisi uses in Tamil

இயற்கை நச்சு நீக்கி கருப்பு கவுனி அரிசி – Karuppu kavuni arisi uses in Tamil

கருப்பு கவுனி அரிசி இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவ ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்த அரிசியில் அதிகம் நிறைந்துள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் ஊட்ட பொருட்கள், நமது இரத்தத்தில் இருக்கின்ற பிரீ ராடிகல் எனப்படும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்ற நச்சுக்களை நீக்குகின்றது. மேலும் மனிதர்களின் கல்லீரலில் அதிகளவில் சேர்ந்திருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

- Advertisement -

நார்ச்சத்து கருப்பு கவுனி அரிசி பயன்கள் – Benefits of Kavuni Rice

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெற வேண்டும். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கருப்பு கவனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவுக்கு நார்ச்சத்து கிடைத்து மற்ற செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. மேலும் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்பசம் போன்ற செரிமான உறுப்புகள் தொடர்பான குறைபாடுகள் தோன்றுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு கவனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

Black rice benefits in Tamil

நீரிழிவு நோய்க்கு கருப்பு கவுனி அரிசி பயன்கள் – Black rice benefits in Tamil

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், அவ்வப்போது கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதாகவும், இந்த அரிசியில் இருக்கின்ற நார்ச்சத்து இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் சேர செய்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீரான அளவில் இருக்குமாறு செய்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

- Advertisement -
இதையும் படிக்கலாமே: அரிசி வகைகள் அதன் பயன்கள்

உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால் இந்த அரிசியை கொஞ்சம் சாப்பிட்டாலே அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தந்து தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை கூடுவதை தடுக்கிறது.

இதய நோய்களுக்கு கருப்பு கவுனி அரிசி பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உதவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருப்புகவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் பைட்டோ கெமிக்கல் வேதிப்பொருட்கள், நமது ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாகக் குறைக்கிறது. இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் கொழுப்புச்சத்தை பொதுவாக கெட்ட கொழுப்பு என்பார்கள். இந்த வகை கொழுப்புதான் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இன்ன பிற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்படுகின்றது.

புரதச்சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி

மற்ற எல்லா வகை அரிசியைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள். கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறை எடுத்துக்கொள்வதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் தசைகளின் இறுக்கத் தன்மையை அதிகரித்து உடல் வலிமையை கூட்டுகிறது.

Karuppu Kavuni arisi payangal

புற்றுநோய்க்கு கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் இந்த அரசியல் செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனை படி இந்த கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆஸ்துமா நோய்க்கு கவுனி அரிசி

ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு நுரையீரல்களில் அதிகளவு மியூக்கஸ் எனப்படும் சளி சுரப்பு ஏற்படும் பொழுது அவர்களால் சரிவர சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து, அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: பருப்பு வகைகள்

கருப்பு கவுனி அரிசியில் என்ன செய்யலாம்

  • கருப்பு கவுனி அரிசி கொண்டு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளான இட்லி, தோசை போன்றவரை சமைக்கலாம்.
  • இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் பாயசம், இனிப்பு பொங்கல் போன்றவரை கருப்பு கவுனி அரிசி கொண்டு சமைக்கலாம்.
  • மதியவேளைகளில் நாம் உண்ணக்கூடிய சாதத்தையும் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யலாம்.

கருப்பு கவுனி அரிசி தீமைகள்

அனைத்து பொருட்களிலும் நன்மையான பலன்கள் இருப்பதுபோலவே தீமையான பலன்களும் இருக்கும். அது போலத்தான் கருப்பு கவுனி அரிசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் சாப்பிட வேண்டும் எனவும், தொடர்ந்து அளவிற்கதிகமாக கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் அந்த அரிசியில் உள்ள கன உலோக மூலக்கூறுகளால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -