உங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா? இந்த 3 பொருள் போதும்.

cash-ganesh

நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவரவர் செய்யும் வேலையில் மனத் திருப்தி என்பது இருக்க வேண்டும். அந்த மனத்திருப்தி, ஆண்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் தான் கிடைக்கப் பெறும். அந்த சம்பாத்தியம், நம் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, சொல்லப்போனால் தேவைக்கு அதிகமாக கிடைத்தால்தான் மனநிம்மதி கிடைக்கும். இதேபோல்தான் பெண்களும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், அதிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் என்பது நிறைவானதாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால், வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்கள், சமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் இவைகள் அனைத்தும் நிறைவான முறையில் இருந்தால்தான் மன நிம்மதியும், சந்தோஷமும் அடைய முடியும். இப்படி மன அமைதி, மன நிம்மதி, மன சந்தோஷம், இவை அனைத்தும் ஒருவருக்கு லாபம் பன்மடங்கு பெருகினால் மட்டுமே கிடைக்கிறது. இந்த லாபத்தை அதிகப்படுத்திக் கொள்ள நாம் முதலில் என்ன செய்ய வேண்டும், என்பதைப் பற்றியும் நாம் எடுக்கும் முயற்சியானது எந்த தடையிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஒரு சிறிய பரிகாரத்தை பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

praying

முதலில் எந்த ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்றாலும் அதற்கு விடா முயற்சி என்பது அவசியம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் சிலருக்கு வெற்றி என்பது முதல் படியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு வெற்றியானது படிப்படியாக ஏறினால் தான் கிடைக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு முதல் முயற்சி, இரண்டாவது முயற்சி தோல்வியில் போய் முடிந்திருக்கும். சில பேருக்கு பல முயற்சி கூட தோல்வியை தழுவும். முதல் படியில் வெற்றியை அடைந்தவருக்கு அதிர்ஷ்டம் பக்கபலமாக இருந்திருக்கும். ஆனால் தோல்வியை மட்டும் தழுவி வந்து கொண்டிருப்பவர்களுக்கு முயற்சி மட்டுமே பக்கபலமாக இருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருப்பவர் படிப்படியாக முன்னேறுவதில் தான் சுவாரஸ்யமே இருக்கின்றது. சிலர் தங்களுடைய முன்னோர்கள் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் சொந்தக்காலில் தான் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இதில் நீங்கள் எப்படிபட்டவர்? எப்படிப்பட்டவராக இருந்தாலும் விடா முயற்சியை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். வெற்றியும் லாபமும் நிச்சயம்.

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு பொருளையும் பன்மடங்காக பெருக்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்க்கு உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் முழுமையாக பன்னீர் ஊற்றி, சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து, ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் போட்டு நீங்கள் சொந்த தொழில் செய்யும் இடமாக இருந்தால் அங்கு பூஜை அறையில் வைத்து விடலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால், உங்களது அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, உங்களது மேஜையின் மேல் இதை வைத்துக் கொள்ளலாம். வீட்டில் செல்வ செழிப்பு தேவை என்பவர்கள் வீட்டிலும் பூஜையறையில் இதை வைத்துக் கொள்ளலாம். இந்த வாசமே உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை உண்டாகும். வெற்றிக்கான வழிகள் தானாகவே பிறக்கும்.

pachai-karpooram

நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கானதடையையும் நீக்கும் சக்தியானது இந்த ‘பச்சை கற்பூரம், பன்னீர், மஞ்சளுக்கு’ உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் தான் போய் முடியும்.. என்ற எண்ணத்தை இந்த பரிகாரம் உங்களுக்கு தந்து விடும். அந்த நம்பிக்கையை உங்களது வாழ்க்கையை முன்னேற்ற உதவும்.

- Advertisement -

இந்த பச்சைக்கற்பூரமானது பணத்தை மட்டும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இது பணத்தை மட்டும்தான் இருக்குமா என்றால், இல்லை. பணம் தவிர உங்கள் வீட்டு சமையலறையில் இந்த பச்சை கற்பூரத்தை வைத்தால், அரிசி, பருப்பு, தானியம் இவைகளும் எந்த குறைவும் இல்லாமல் அள்ள அள்ள இருந்து கொண்டே இருக்கும்.  பச்சை கற்பூரத்தை சிறிய காகிதத்தில் மடித்து சமையலறை அலமாரியில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் தனத்தோடு சேர்த்து தானிய லட்சுமியும் நிறைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரராகும் அந்த ரகசியம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thozhil valarchi pariharam Tamil. Thozhil prachanai theera in Tamil. Thozhilil munnera vazhipadu in Tamil. Pachai karpooram benefits in Tamil.