எவ்வளவு பெரிய பானை வயிராக இருந்தாலும் 7 நாட்களில் கரைந்து காணாமல் போகும். தினமும் 1 டம்ளர் மோரை இப்படி குடித்து பாருங்கள்.

thoppai
- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு மோர் குடிக்கிற மாதிரியும் ஆச்சு. உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிற மாதிரியும் ஆச்சு. அதேசமயம் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கவும் இந்த ஒரு டம்ளர் மோர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். காலையில் நீங்கள் குடிக்கின்ற இந்த 1 டம்ளர் மோர் உங்களுடைய உடலில் பல நல்ல வேலைகளைச் செய்யப் போகின்றது. சிரம படாதீங்க. தொடர்ந்து 10 நாட்கள் இப்படி ஒரு டம்ளர் மோர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும். உடல் எடையை குறைக்கக்கூடிய மோர் தயார் செய்வது எப்படி.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள்‌. பின் சொல்லக் கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக அந்த கடாயில் போட்டு கருக விடாமல் பொன்னிறமாக வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருட்களையும் ஒரு நிமிடம் போல வறுத்து எடுத்தாலே போதுமானது. வெந்தயம் – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு. (இறுதியாக கருவேப்பிலையை வறுக்கும் போது அந்த கருவேப்பிலை மொறுமொறுவென வரும் அளவிற்கு நன்றாக கடாயில் வறுத்து கொள்ள வேண்டும்.)

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு இதோடு பெருங்காயத்தூள் – 1/2 சேர்த்து நன்றாக பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் இந்த பொடியை சேர்த்து தான் மசாலா மோர் தயார் செய்ய போகின்றோம்.

உதாரணத்திற்கு இரண்டு பேருக்கு மசாலா மோர் தயார் செய்யப் போகின்றோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தயிரோடு தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், மல்லித்தழை – சிறிதளவு, சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிக்ஸியில் அரைக்கும்போது இதில் லேசாக வெண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரத்தொடங்கும். மேலாக அந்த வெண்ணொயை எடுக்க முடிந்தால் ஒரு ஸ்பூனை வைத்து அப்படியே எடுத்துவிடுங்கள். வெண்ணெய் நீக்கிய மோர் வெயிட் லாஸ் செய்ய சரியானதாக இருக்கும்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் அடித்து வைத்திருக்கும் இந்த மோரை வடிகட்டி கொள்ளுங்கள். இந்த மோரில் இன்னுமொரு 1 1/2கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கூடவே முதலில் நாம் அரைத்து வைத்த மசாலா பொடியில் – 1/2 ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து 2 டம்ளரில் ஊற்றி பரிமாறினால் வெயிட் லாஸ் மோர் தயார். ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் மோருக்கு 1/4 ஸ்பூன் அளவு நம் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்தாலே போதுமானது.

இந்த வெயில் காலத்தில் காலையில் டீ காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு இந்த மோர் குடித்து வாருங்கள். உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து கிடைக்கும். நாள்தோறும் உடல் புத்துணர்ச்சியாக காணப்படும். 10 நாள் தொடர்ந்து குடிக்கும்போது நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீர்கள். உடல் எடை சீராக குறைய தொடங்கும். பத்து நாட்கள் முடிந்த பின்பு, மோர் குடிப்பதை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து இப்படி மோர் குடித்து வர உங்களுடைய தொப்பை குறைய தொடங்கும். உடல் எடை சீராக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -