கை, கால் வலி, மூட்டு வலி பிரச்சனை தீர இந்த எளிமையான டிப்ஸை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் போதும். இவ்வாறான வலிகளிலிருந்து விரைவாக விடுதலை பெற முடியும்

ragi
- Advertisement -

நம்முடைய தாத்தா பாட்டியெல்லாம் குறைந்தது 90 வயது வரையாவது ஆரோக்கியமாக அவர்களது வாழ்நாளை கழித்தார்கள். அதன் பிறகு ஒரு சிலர் 70, 80 வயதுவரை ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை 50 வயது ஆவதற்கு முன்னரே கை, கால் வலி, மூட்டு வலி, முதுகு எலும்பு வலி, இடுப்பு வலி என பல்வேறு வலிகளில் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் உடம்பில் இருக்கும் வைட்டமின்கள் குறைபாடாகும். அதாவது உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை நாம் சாப்பிடும் உணவின் மூலம் சேர்த்துக் கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாகும். ஆனால் இதில் யாரும் இப்பொழுது அக்கறை கொள்ளவில்லை. இவ்வாறான குறைபாட்டினால் வருகின்ற பிரச்சனைகளுக்காக மருத்துவமனையை தேடி செல்கின்றனர். ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள குறிப்பினை சரியாக பின்பற்றி வந்தால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். வாருங்கள் அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Jakkamma patti

ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் கை, கால் அனைத்தும் நமது விருப்பத்திற்கு ஏற்ப இயங்குவதற்கு எலும்புகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த எலும்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்து கால்சியம் ஆகும். இந்த கால்சியம் எலும்பு மற்றும் பற்களில் தான் 90% நிறைந்திருக்கிறது. இவற்றிற்கு தேவையான ஊட்டச்சத்தை நாம் உண்ணும் உணவின் மூலம் தான் கொடுக்க முடியும்.

- Advertisement -

கால்சியத்தின் அளவு உடலில் சரியாக இருந்தால்தான் அவை ரத்த ஓட்டத்திற்கும், இதயத் துடிப்பிற்க்கும், உடலின் மற்ற பாகங்கள் சரியாக இயங்குவதற்கும் துணைபுரிய முடியும். 50 வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள் தினமும் 1,000 மில்லி கிராம் கால்சியமும், அதுவே 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் 1,200 மில்லி கிராம் கால்சியமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

bone

இதுவே 50 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் 1,200 மில்லி கிராம் கால்சியமும், 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 1,300 கிராம் கால்சியமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் குறைபாடு உள்ளதை எளிதாக அறிய முடியும். கை, கால், பாதத்தில் உணர்ச்சி இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் அதிகரிப்பது, சதை பிடிப்பு, கை, கால், மூட்டுவலி, பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கால்சியம் குறைபாட்டை சரி செய்ய முதலில் இரண்டு கைப்பிடி முருங்கைக் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு இரும்பு கடாயை வைக்கவேண்டும். கடாய் நன்றாக சூடானதும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டு கைப்பிடி முருங்கைக் கீரையை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

maruthani vidhai

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து, மூன்று ஸ்பூன் கேழ்வரகு மாவினை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து சிறிது நேரம் இவ்வாறு கலந்து கொண்டே இருக்க, கீரை மற்றும் கேழ்வரகு மாவு நன்றாக வெந்து சுருண்டு வர ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். இதனை சுட சுட அப்படியே சாப்பிடலாம். மிகவும் அருமையாக இருக்கும். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் கால்சியம் குறைபாடு மறைந்து மிகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

- Advertisement -