பாரம்பரிய சுவையில் செட்டிநாடு அடை தோசை மாவின் ரகசியம் இதுதானா? இப்படி அடை தோசை சுட்டுக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உங்கள் சமையலுக்கு அடிமையாகி விடுவார்கள்.

adai1
- Advertisement -

பெரும்பாலும் செட்டிநாடு உணவுகள் என்றாலே அதில் மசாலா வாசம் தனியாகத்தான் இருக்கும். அதிலும் இப்படி அடையை அவர்கள் சுட்டு வைத்தால், அந்த வாசத்திற்கு கோடி ரூபாய் கொடுக்கலாம். மொறுமொறுப்பாக அசத்தலான ஆரோக்கியம் தரும் செட்டிநாடு ஸ்டைல் அடைக்கு மாவு எப்படி அரைப்பது? அந்த அடை மாவை வைத்து எப்படி எல்லாம் அடை தோசை சுட்டு சாப்பிடலாம் என்பதை பற்றிய சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில். அடை பிரியர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

சரியான அடை மாவுக்கு தேவையான அளவுகளை இப்போது பார்த்துவிடலாம். உளுந்தம் பருப்பு – 25 கிராம், துவரம்பருப்பு – 25 கிராம், கடலை பருப்பு – 25 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், பச்சரிசி – 50 கிராம், சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 3/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 3, தோல் சீவியை இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 5, வெந்தயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

- Advertisement -

ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு, இதோடு 1 கைப்பிடி – அளவு தேங்காய் துருவல், மிக சிறிய கோலிகுண்டு அளவு – புளி, தேவையான அளவு – உப்பு, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அரைக்க வேண்டும். ரொம்பவும் கொரகொரப்பாக அரைக்க வேண்டாம். ஏனென்றால் இதை கொஞ்சம் நைஸ் அடை தோசை ஆக கூட நாம் வார்க்கலாம்.

லேசான கொரகொரப்பு இருக்கும்படி மாவை அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதில் பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், அளவு ஊற்றி மாவை சரியான பக்குவத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த அடை மாவை எடுத்து தோசை கல்லில் வார்த்து ஓரளவுக்கு மெலிசாக தீட்டும் அளவுக்கு மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து மிதமான தீயில் சூடானதும், இந்த மாவை அடுப்பில் ஊற்றி மெல்லிசாக மொறுமொறுப்பாகவும் அடை தோசையை சுட்டு சாப்பிடலாம். ஓரளவுக்கு தடிமனாகவும் அடை தோசையை வார்த்து சுட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காயில் கடாய் ஃப்ரை கூட செய்யலாமா? டேஸ்ட்ல சிக்கன் வறுவல் தோத்து போகும். சும்மா ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

இந்த மெல்லிசாக மொறு மொறுப்பாக ஊற்றிய அடை தோசைக்கு கெட்டி சட்னி செம்ம காம்பினேஷன் ஆக இருக்கும். இல்லையென்றால் அவியல், மோர் குழம்பு வைத்து கூட அடையை பரிமாறிக் கொள்ளலாம். ஆரோக்கியம் தரும் இந்த அடையின் வாசமும் ருசியும் அவ்வளவு டாப்பு டக்கர் ஆக இருக்கும். மிஸ் பண்ணாம ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க. அடையை எப்போதுமே மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சிவக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம். ரெசிபி பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -