குக்கரில் கார சட்னியா? அதுவும் வெறும் 10 நிமிடத்தில் கார சட்னியை செய்ய சூப்பர் ஐடியா இதோ உங்களுக்காக.

kara-chutney_tamil
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள கார சட்னி என்றாலே எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால், அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த வெங்காயம் தக்காளியை வதக்கி விட்டு, ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பதற்குள் போதும் என ஆகும். குக்கரில் கூட நாம் கார சட்னி அரைக்கலாமே. அது எப்படி என்பதை பற்றிய சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக. ஒரு முறை உங்க வீட்ல இப்படியும் ஒரு கார சட்னி அரைச்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சுவை சூப்பராக இருக்கும்.

செய்முறை

ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளி பழம் 3, நறுக்கிய வெங்காயம் 2, தோலுரித்த பூண்டு பல் 10, வர மிளகாய் 10, உப்பு தேவையான அளவு, புளி சின்ன கோலி குண்டு அளவு, போட்டு குக்கரை மூடி மூன்று விசில் வைக்கவும். வெங்காயம் தக்காளியில் இருந்து தண்ணீர் விடும். கவலைப்படாதீங்க. தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் தெளித்து விசில் வைத்துக் கொள்ளவும். பிரஷர் அடங்கியவுடன் இந்த வேக வைத்த விழுதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்த சட்னியை கடாயில் ஊற்றி, இரண்டு நிமிடம் போல நன்றாக சூடு செய்து பரிமாறினால் சூப்பரான கார சட்னி தயார்.

இந்த சட்னி நெஜமாவே நல்ல ருசி தரும். டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுத்தாலும் சீக்கிரம் கெட்டுப் போகாது. சட்னியும் சுலபமாக செய்யக்கூடியது. கடாயில் நல்லெண்ணெயில் தாளிப்பில் கொட்டி வதக்கும்போது மட்டும் பச்சை வாடை போக வதக்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கூடுதலாக ஊற்றி, இன்னும் நல்ல சுருள சுருள சட்னியை வதைக்கி ஆரவைத்து ஒரு பாக்ஸில் ஸ்டோர் செய்தால், இரண்டு நாட்கள் பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம். கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் 2 மினிட்ஸ் சட்னி:
இன்னொரு கார சட்னி ரெசிபியையும் இப்போது நாம் பார்க்க போகின்றோம். இதற்கு வதக்க தேவையில்லை. அறைக்கத் தேவையில்லை. அடுப்புக்கூட பற்றவைக்க தேவையில்லை. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 வெங்காயம், 2 தக்காளி, கோலிகுண்டு அளவு புளி, தோல் சிவிய இஞ்சி 1 இன்ச், பூண்டு 4 பல், கருவேப்பிலை 1 கொத்து, புதினா 10 இலைகள், கொத்தமல்லி தழை 1/2 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 2 கொத்து, உப்பு சிறிதளவு போட்டு, அப்படியே பச்சையாக அரைத்து ருசித்துப் பாருங்களேன். இந்த சட்னியின் ருசியும் சூப்பராக தான் இருக்கும். திடீரென்று அவசரம். ஒரு சட்னி தேவை 2 மினிட்ஸில் சட்னி அரைக்க வேண்டும் என்றால் இந்த சட்னியை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: கலக்கலான கத்திரிக்காய் சட்னி ஒரு முறை இப்படி அரைத்து பாருங்களேன். பிறகு இந்த சட்னிக்கு உங்க வீட்ல நிறைய டிமாண்ட் வந்துடும்.

இதே இன்ஸ்டன்ட் சட்னிக்கு சின்ன வெங்காயத்தை போட்டு அரைத்தீர்கள் என்றால் இன்னும் சுவை இருக்கும் சில பேர் சின்ன வெங்காயத்தை உரித்து பாட்டிலில் பிரிட்ஜில் வைத்திருப்பார்கள். பத்து சின்ன வெங்காயத்தை எடுத்து போட்டு இதே போல ஒரு சட்டியை அரைக்கும் போது அதன் ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இந்த இரண்டு சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா அவசரத்துக்கு தேவைப்படும் போது முயற்சி செய்து பாருங்கள். பயனுள்ளபடி இருக்கும்.

- Advertisement -