எந்த 10 பேருக்கு தானம் கொடுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?

thanam-dhanam
- Advertisement -

தானம் என்பது ஒருவர் கேட்காமல் நாமாகவே மனமுவந்து புண்ணியத்தின் பெயரில் நம்மிடம் இருப்பதை கொடுப்பது ஆகும். தர்மம் என்பது பிறர் கேட்க நாம் கொடுப்பது ஆகும். தானத்திற்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தர்மம் செய்யும் பொழுது அதை பெறுபவரை விட, கொடுப்பவருக்கு புண்ணியம் சேரும். ஆனால் தானம் செய்யும் பொழுது இருவருக்கும் புண்ணியத்தில் பங்கு உண்டு. புண்ணியத்திற்கு செய்யப்படும் தானத்தை இந்த 10 பேருக்கு செய்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறது ஆன்மீகம்! அந்தப் பத்து பேர் யாரெல்லாம்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்ததானம், கண்தானம் என்று அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கூறிக் கொள்வது உண்டு. எந்த தானம் செய்தாலும் தகுந்த நேரத்தில் செய்யப்படும் தானமானது இரட்டிப்பு பலன்களை தருகிறது. பசி இல்லாத ஒருவருக்கு உணவு கொடுப்பதை விட, கடும் பசியில் இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதே போல தான் ஒவ்வொரு தானமும் தேவை அறிந்து செய்தால் அதன் பலனும் பன்மடங்கு பெருகும். குளிரில் நடுங்கும் ஒருவருக்கு கம்பளி தானம் செய்வது, தாகத்தில் தவிக்கும் ஒருவருக்கு தண்ணீர் தானம் செய்வது, அன்பிற்கு ஏங்கும் ஒருவருக்கு அன்பை தானமாக செய்வதும் கூட இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -

ஆனால் நாம் எந்த நேரத்தில்? யாருக்கு தானம் செய்கிறோம்? என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இறை நெறியில் இருந்து தவறி ஒழுக்கமில்லாத ஒருவருக்கு நீங்கள் செய்யும் தானம் ஆனது பிரயோஜனம் இல்லாமல் போய் விடுகிறது. அவர் கடும் பசியில் இருந்தாலும் அறநெறியில் இருந்து தழுவியதால் இவருக்கு செய்யும் தானம் ஆனது நமக்கு பலன்களை கொடுப்பதில்லை.

தானம் கொடுப்பவர்கள் தவறான வழியில் ஈட்டிய பணத்தில் இருந்து தானம் செய்தால் அந்த தானத்திற்கு ஒரு பலனும் இருப்பதில்லை. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் செய்யப்படும் தானமானது மட்டுமே பலன்களை அளிக்கும். அடுத்தவரை ஏமாற்றி, அபகரித்த பணத்திலிருந்து தான தர்மங்களை செய்து விட்டால் பலன் கிடைத்து விடுமா? பொய், பித்தலாட்டம் செய்து அடுத்தவர் பொருட்களை திருடும் திருடர்களுக்கு செய்யும் தானம் பிரயோஜனம் அற்றது.

- Advertisement -

அறம் வழுவிய பிராமணர் ஒருவருக்கு செய்யும் தானம் ஆனது ஒரு போதும் பயன் தருவதில்லை. மந்திரங்கள், ஹோமங்கள், வேத கல்வி, ஜெபம் ஆகியவற்றால் தங்களையும், மற்றவர்களையும் காக்கும் பிராமணர்களே உண்மையான அந்தணர்கள் ஆவர். போலி ஆசாமிகள், போலி குருமார்கள், போலி சாமியார்கள் ஆகியோருக்கு நீங்கள் செய்யும் தானம் ஆனது ஒருபோதும் பிரயோஜனம் படுவதில்லை.

ஈவு, இரக்கமில்லாமல் பாவம் செய்தவர்கள், செய்த நன்றிக்கு விசுவாசமாக இல்லாமல் நன்றி கெட்டவர்கள், கற்ற வேதங்களை விற்பனை செய்பவன், கெட்டவர்களுக்காக தெரிந்தே சமையல் செய்து கொடுப்பவர்கள், பிறப்பால் அந்தணனாக பிறந்து அந்த தொழிலை செய்யாதவர்கள் ஆகியோருக்கு நாம் செய்யும் தானம் ஆனது ஒரு பிரயோஜனமும் படாமல் போய்விடுமாம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று கூறுவதை பார்த்திருப்போம். அதே போல இந்த பத்து பேருக்கு நாம் செய்யும் தானம் ஆனது பலன் தருவதில்லை என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும்.

- Advertisement -