தினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

vilakku-deepam

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நம் வீட்டில் இருள் நீங்க வேண்டு என்பதற்காகத் தான், வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஒளிர விட்டு, தீப வழிபாடு செய்கின்றோம். நிச்சயமாக தீபச் சுடரின் ஒளியில் நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை. ஆனால் சில பேர் இந்த தீபம் ஏற்றும் எண்ணெய்க்கே செலவு கணக்கை அதிகமாக பார்ப்பார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயை தரமானதாக வாங்கி வைத்துக்கொண்டு, தீபம் ஏற்றுவதற்காக மலிவான விலையுள்ள எண்ணெயை வாங்கி விளக்கு ஏற்ற பயன்படுத்துவார்கள். இது மிகப்பெரிய தவறு.

nallennai

நம்முடைய உணவுக்கு, சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துகிறோமோ அதே தரத்தில் தான் நம் வீட்டிற்கும், பூஜை அறையில் தீபம் ஏற்ற நல்லெண்ணெய்யை வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு என்று வாங்கிய எண்ணெயை தனியாகப் பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘பூஜை அறையில் தீபம் ஏற்றுவதற்கு தானே! இந்த எண்ணெய் போதும்’ என்ற எண்ணத்தோடு தரம் குறைவான எண்ணெயை, விலை குறைவான எண்ணெயை வாங்கி தீபமேற்றினால் நிச்சயம் அதன் மூலம் நமக்கு பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இனி இந்த தவறை உங்களுடைய வீட்டில் செய்து வந்தால் இனி திருத்திக் கொள்ளுங்கள்.

deepam

நிறையப் பேருக்கு தினம்தோறும் நெய் தீபம் ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும். தினம்தோறும் விளக்கில் நெய் ஊற்றி, அதுவும் சுத்தமான நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும் என்றால் அதற்கான செலவு என்பது கொஞ்சம் அதிகம் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சுத்தமான நல்லெண்ணெயில் 1 ஸ்பூன் அளவு நெய் கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்படியாக ஒரு ஸ்பூன் அளவு நெய் கலந்த நல்லெண்ணெயில் தினம்தோறும் நம் வீட்டில் தீபம் ஏற்றினால் அது நமக்கு நன்மையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நெய்யும் எண்ணெயும் கலந்த கலவையில் 2 டைமண்ட் கற்கண்டுகளைப் போட்டு தீபம் ஏற்றலாம். கற்களை போட்டு தீபம் ஏற்றுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், அந்த கற்கண்டை தினம்தோறும் மாற்றுவது கிடையாது.

dymond-karkandu

டைமண்ட் கற்கண்டு தினம்தோறும் விளக்கில் போட்டு தீபம் ஏற்றும் பழக்கம் உங்களிடத்தில் இருந்தால், அந்த கற்கண்டை தினம்தோறும் புதியதாக போட வேண்டும். பழைய கற்களை எடுத்து உங்களுடைய வீட்டில் வெளிப்புறங்களில் மொட்டை மாடியில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் அதை எறும்புகள் சாப்பிட்டு விடும்.

praying-god1

நாம் சம்பாதித்த பணம் நம் கையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நமக்கு தேவையான செலவுகளுக்கு, செலவு செய்ய, அவ்வப்போது பணம் வருவதும் போவதுமாக இருப்பது தான் நல்லது. தேங்கி கிடக்கும் பணத்தால் என்ன பயன் இருக்கப் போகின்றது? முதலில் பணம் செலவே ஆகக்கூடாது  என்ற எண்ணத்தை நீக்கி விட்டு, அதன் பின்பு வழிபாட்டை மேற் கொள்பவர்களுக்கு நிலையான வருமானம் நிலைத்து நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பூஜை செஞ்சு முடிச்சிட்டீங்களா? அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க! எந்த தெய்வ குற்றமும் வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.