உங்கள் கஷ்டத்திற்கு காரணமான அந்த 2 விஷயம் என்ன? அவைகளுக்கு எளிய பரிகாரமாக எது இருக்கும்?

sad-pithru-tharpanam
- Advertisement -

மனித வாழ்வில் மிகப் பெரிய தோஷங்கள் 2 வகை உண்டு. இந்த 2 விஷயங்களால் தான் நம் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பிறக்கும் பொழுது அனைவரும் நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள். ஆனால் வளரும் பொழுது ஒருவன் பணக்காரனாகவும், மற்றொருவன் ஏழையாகவும் வாழ்ந்து இறக்கிறான். இதற்கு இந்த இரண்டு தோஷங்கள் நிவர்த்தி செய்யாமல் அவன் வாழ்வது தான் காரணம் என்கிறது சாஸ்திரங்கள் மற்றும் ஜோதிட நூல்கள். அந்த இரண்டு வகையான பாவங்கள் என்ன? இதற்கான எளிய பரிகாரம் தான் என்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sad-crying4

ரெண்டு வகையான பாவங்களும் ஒரு மனிதனை நிலைகுலையச் செய்யும் அளவிற்கு துன்பங்களைக் கொடுக்கும். மீண்டும் மீண்டும் மனித பிறவி எடுப்பதற்கு இந்த இரண்டு வகையான பாவங்கள் அவன் செய்வது தான் காரணம். பிறவி இல்லா நிலை அடைய இந்த இரண்டு வகையான தோஷங்களுக்கு, இந்தப் பிறவியிலேயே நிவர்த்தி காண்பது அவசியமாகும். அப்படியான இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா?

- Advertisement -

ஒன்று நம் பூர்வ புண்ணிய கர்ம வினை பாவங்கள். இரண்டாவதாக இருப்பது பித்ரு தோஷம் ஆகும். இவ்விரு தோஷங்கள் தான் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்கிறார்கள். முன்னோர்கள் செய்த பாவம் வழிவழியாக அவருக்கு பிறந்த சந்ததிகளுக்கு சேரும் என்கிறார்கள். ஒருவர் செய்த பாவத்திற்கான தண்டனையை, எந்த பாவமும் செய்யாத இன்னொருவர் ஏன் அனுபவிக்க வேண்டும்? இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று பலரும் நினைப்பது உண்டு.

indian-family

தாத்தா செய்த பாவம் பேரனை வந்து அடைவது நியாயம் இல்லை அல்லவா? எனில் தாத்தா சேர்த்து வைத்த சொத்து மட்டும் பேரனுக்கு சொந்தம் என்று கூறும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது தானே? இதே போல தான் இதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வது நியாயம் அல்லவோ? நீங்கள் செய்யாத இந்த பாவத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

முன்னோர்கள் செய்த பாவத்திற்கான பித்ரு தோஷத்திற்கு நிவர்த்தியை நம்மால் எளிதாக செய்து கொள்ள முடியும். ஆனால் நாம் செய்த பூர்வ ஜென்ம கர்ம வினையை அவ்வளவு எளிதாக பரிகாரங்களை செய்து தப்பித்துக் கொள்ள முடியாது. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்க தான் இந்த பிறவியில் துன்பமும், இன்பமும் மாறி மாறி நம்மை வந்தடைந்து கொண்டு இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பது இறைவன் விடுத்த கட்டளை.

old-age-people

இப்படி கர்மவினையும், பித்ரு தோஷமும் நீங்க நாம் இந்த பிறவியில் புண்ணியத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் மீண்டும் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும் அல்லது மீண்டும் பிறந்தாலும் பணக்காரனாக, வறுமை இல்லாத நிம்மதியான வாழ்வை வாழ முடியும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு நிறைய பரிகாரங்கள் உண்டு. அதே போல கர்மவினை பாவம் நீங்கவும் நிறைய பரிகாரங்கள் உண்டு. இவ்விரண்டு பாவங்களும் நீங்க சிறந்த பரிகாரமாக இருப்பது ஒன்று தான். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு சிறு உதவி கூட, உங்கள் புண்ணிய கணக்கை பன்மடங்கு அதிகரிக்க செய்யும். மேலும் கர்மவினை பாவங்களும், பித்ரு தோஷங்களும் எளிதாக நீங்க இந்த பரிகாரம் சிறந்த பரிகாரமாக இருக்கும். எனவே உங்களால் முடிந்த உதவிகளை முடிந்த நேரத்தில் அவர்களுக்கு செய்யுங்கள்.

- Advertisement -