அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்

dhurgai
- Advertisement -

பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.

veyil ukandha amman

துர்க்கை காயத்ரி மந்திரம்:

ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்

- Advertisement -

பொது பொருள்:

காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது. தினமும் கூற முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூறலாம். ராகு காலம் துர்க்கையை வழிபட உகந்த நேரம் என்பதால் இந்த மந்திரத்தை ராகு காலத்திலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.

durga

துர்க்கை வழிபாடு

- Advertisement -

பராசக்தியான பார்வதியின் ஒரு அம்சமாக தோன்றியவர் தான் துர்கா தேவி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கின்ற தெய்வம் துர்கா தேவி. அதிலும் குறிப்பாக எதிர்ப்புகளை சமாளிக்கும் வெற்றி பெறும் ஆற்றலை வழங்குகிறார். புராண காலத்தில் அயோத்தி சக்கரவர்த்தியான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி துர்கா தேவியை வழிபட்ட பிறகே, இலங்கை வேந்தன் ராவணனை வெற்றி கொள்ளும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது. வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவர்கள், நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளால் அவதிப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை தேவியை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும்.

durga

துர்க்கை வழிபாட்டிற்குரிய தினங்கள்

துர்க்கை சக்தி வடிவான தெய்வம் ஆவார். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வங்களை வழிபடுவதற்குரிய தினங்களாக வாரத்தில் வருகின்ற செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன. அதோடு மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் தங்களின் குறைகள் தீர அம்மனுக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் பலன்கள் விரைவாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும். ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த மாதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மாதத்தில் வருகின்ற அனைத்து தினங்களும் சக்தி வழிபாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றன. எனவே ஆடி மாதத்தில் துர்க்கையம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழா காலம் மகிஷாசுரமர்த்தினி என்கிற வடிவம் தரித்த துர்க்கையம்மனை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான காலகட்டமாகும். இக்காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து, விரதங்கள் மேற்கொண்டு வழிபடுவர்களுக்கு நன்மையான பலன்கள் தொடர்ந்து ஏற்படும்.

durga

துர்க்கை வழிபாடு பலன்கள்

துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Durga gayatri mantra in Tamil. It is also called as Gayathiri manthiram in Tamil or Manthiram in Tamil.

- Advertisement -