தாளிக்க கூட வேண்டாம் 4 பொருளில் சுவையான இந்த தேங்காய் சட்னி டிஃபரண்டா இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க! செமையா இருக்குன்னு நீங்களே சொல்லுவீங்க.

coconut-chutney
- Advertisement -

தேங்காய் சட்னி பொதுவாக எல்லோருமே வீட்டில் அடிக்கடி அரைத்து சாப்பிடுவது வழக்கம். எழுந்ததும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியை அரைத்து வைத்து விட்டால் பெரிய வேலை முடிந்தது போல ஒரு உணர்வு வரும். அஞ்சு நிமிஷம் கூட ஆகாத இந்த தேங்காய் சட்னியை வித்தியாசமான முறையில் எப்படி நாலு பொருள் வைத்து சுவையாக அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சிறிய தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – நான்கு, பூண்டு பற்கள் – ஐந்து, கருவேப்பிலை – ஒரு கொத்து, புளி – கோலிகுண்டு அளவு, கல் உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
தேங்காய் சட்னி செய்வதற்கு முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். மூணு பத்தை வரும் அளவிற்கு தேங்காய் இருந்தால் போதும், சிறிய தேங்காயாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு தண்ணீரில் அலசி உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நாலு நீண்ட பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். பின்னர் தோலுரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து, அதனுடன் ஒரு மீடியம் சைஸ் கோலிகுண்டு அளவிற்கு புளியை விதைகள், நாரெல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தூள் உப்பாக இல்லாமல் கல் உப்பாக சேர்ப்பது சட்னியின் சுவையை கூட்டி கொடுக்கும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலையை ஒரு கொத்து அளவிற்கு அப்படியே உருவி சேருங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி முக்கால் பதம் அளவிற்கு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு நீங்கள் தாளிப்பு கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எல்லா வகையான டிபனுக்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலை அல்லது வேர்கடலை போட்டு தான் செய்யப்படுவது உண்டு. ஆனால் இந்த தேங்காய் சட்னிக்கு இது போல உடைத்த கடலை, வேர்க்கடலை என்று எந்த பொருட்களையும் உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பொருட்களின் அளவு சரியாக இருந்தால் அதன் ருசியும் வித்தியாசமாக டேஸ்ட்டியாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த சுவையான தேங்காய் சட்னி செய்வதற்கு ரெண்டு நிமிஷம் கூட ஆகாது. எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டியதுதான். இதற்கு தாளிப்பு கொடுக்க வேண்டும் என்றால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை, ஒரு சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து சேர்த்தால் ஆஹா.. என்று சொல்லிக் கொண்டே 10 இட்லியை கூட சலிக்காமல் சாப்பிடலாம்.

- Advertisement -