இல்லத்தரசிகளே! உங்கள் அடுப்பங்கரையில் ஏற்படும் இந்த சின்ன சின்ன சிக்கல்களை சரி செய்ய சூப்பரான 5 டிப்ஸ் இதோ!

gas-stove-cooker-cleaning
- Advertisement -

அடுப்பங்கரையில் ஏற்படக் கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நிறையவே பலரும் சிரமப்பட வேண்டியிருக்கும் ஆனால் இந்த சிறு சிறு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் எவ்வளவு சிரமமான வேலையும் ரொம்பவே சுலபமாக முடித்து விடலாம். சமையல்கட்டில் நாம் அதிகம் மெனக்கெடாமல் சிரமமான வேலையையும் சுலபமாக்கி கொள்ள கூடிய இந்த சூப்பரான 5 டிப்ஸ் என்ன? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குறிப்பு 1:
சர்க்கரை டப்பாவில் இருக்கும் சர்க்கரை திடீரென தண்ணீர் பட்டு ஈரப்பதத்துடன் இருந்தால் அதை மீண்டும் பொலபொலவென மாற்றுவதற்கு ஒரு தேங்காய் சிரட்டை துண்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சர்க்கரையினுள் அழுத்தி வைத்து விடுங்கள். எல்லா ஈரப்பதமும் தேங்காய் ஓடு உரிந்து விடும். பிறகு சர்க்கரை ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
மிக்ஸி ஜார், குக்கரின் கேஸ்கட், மற்றும் விசில் போன்றவற்றை அடிக்கடி எடுத்து சுத்தம் செய்தால் விரைவிலேயே அது பழுது போய்விடும் எனவே மாதம் ஒருமுறை அவற்றை கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். இப்படி சுத்தம் செய்யும் பொழுது கொஞ்சம் வினிகர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைத்து சுத்தம் செய்தால் ரொம்ப சுலபமாக பாக்டீரியாக்கள், கிருமிகள் இன்றி சுத்தமாகும். சுடு தண்ணீரில் வினிகருடன் சோடா உப்பு சேர்த்து குக்கர் விசிலை தனித்தனியாக கலட்டி ஊற வைத்து 10 நிமிடம் கழித்து தேய்த்துப் பாருங்கள், எந்த விதமான அடைப்பும் இல்லாமல் விசில் பளிச்சென மின்னும். வினிகருக்கு பதிலாக எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம்.

குறிப்பு 3:
பூண்டு பற்கள் எளிதாக தோலுரிந்து வருவதற்கு அரிசிக்கு உலை வைக்க தண்ணீர் வைக்கும் பொழுது. அதன் மீது மூடி போட்டு வையுங்கள். மூடியின் மீது ஐந்து நிமிடம் பூண்டு பற்களை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்து விடுங்கள். 5 நிமிடத்திற்கு பிறகு எடுத்து உரித்துப் பார்த்தால் ரொம்ப ரொம்ப சுலபமாக தோல் எளிதாக உரிந்து வந்து விடும். அதிக அளவில் பூண்டினை தோல் உரிக்க வேண்டும் என்றால் இது போல் செய்யலாம்.

- Advertisement -

குறிப்பு 4:
உடைத்த தேங்காய் மூடி ஒரு வாரம் ஆனாலும் நிறம் மாறாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்க கொஞ்சம் எலுமிச்சை சாற்றை உட்புறங்களில் தடவி பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். வெளியில் வைக்க வேண்டுமென்றால் உப்பு தண்ணீரில் மூழ்கும் படி வைத்தால் போதும், ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டி இருக்கும்.

குறிப்பு 5:
சமையலறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்கு ரொம்பவே சுலபமாக ஒரு ஸ்ப்ரே பாட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் நீரில் நான்கைந்து எலுமிச்சை துண்டுகளை சேர்க்க வேண்டும். காய்ந்த எலுமிச்சை துண்டுகள் இருந்தாலும் பரவாயில்லை. அதனுடன் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்வீட் கொஞ்சம், சோடா உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் பாத்திரம் தேய்த்த பிறகு சிங்கிள் ஸ்ப்ரே செய்து சிங்க் முழுவதும் சுத்தம் செய்து விட்டால் ஒரு கரப்பான் பூச்சி, எறும்பு கூட எட்டிப் பார்க்காது. அது போல இந்த ஸ்பிரே கொண்டு அடுப்பு மற்றும் அடுப்பின் பின்புறம் டைல்ஸ்களில் இருக்கும் எண்ணெய் பசை போன்றவற்றையும் ரொம்பவே எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -