நீங்கள் நன்றாக வாழ்வதை பார்த்து கண்திருஷ்டி வைக்கும் எதிரிகளிடமிருந்து உங்களை, நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? ஒரு முறை இதை மட்டும் செஞ்சு பாருங்களே!

எதிரிகள் என்று தனியாக யாரும் கிடையாது. நம்முடன் இருப்பவர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர்கள் இவர்களுடைய பொறாமை குணமே நமக்கு எதிரி தான். குறிப்பாக நம்முடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நம்மைப்போல் இல்லாமல் நம்மை விட வசதியில் குறைந்தவர்களாக இருந்தால், இந்த பிரச்சனை கட்டாயம் இருக்கும். எல்லோரும் வயிற்றெரிச்சல் படுவார்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. இருப்பினும் சில பேருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை மனதில் இருக்கும். அந்த அந்த தாழ்வான எண்ணமே, கண் திருஷ்டியாக மாறும். இது கண்ணுக்கு தெரியாத எதிரியின் வரிசையில் தான் போய் நிற்கும்.

enemy

அதாவது நாம் பண்டிகைக்கு நல்ல துணி எடுத்து, நல்ல நகை அணிந்து பார்ப்பதற்கு பளிச்சென்று சந்தோஷமாக விசேஷங்களை கொண்டாடினால் கூட, அடுத்த நாளே நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடும். நாமும் கஷ்டத்தில் தான் இருப்போம். இருப்பினும் நிறைவான சந்தோஷத்தை அனுபவிப்போம். இது கூட சிலருக்கு பொறுக்காது.

இப்படி உங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பவர்களுடைய கண் திருஷ்டி, பொறாமை குணம், கெட்ட எண்ணமும் உங்களை வந்து சேரக் கூடாது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்யலாம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கண் திருஷ்டியும் இல்லை. அவர்களை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் எதுவும் செய்யாது.

enemy1

கொஞ்சமாக சூடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண கற்பூரத்தை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தூள் ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தில் இந்த கற்பூரத் தூளை உங்களது, ஆள்காட்டி விரலால் தொட்டு, (தொடும் போது லேசாக கற்பூரத்தின் தூள் கையில் ஒட்டும்) அதை எடுத்து, வெள்ளை காகிதத்தில் உங்களது எதிரியின் பெயரை எழுத வேண்டும். கண்ணுக்கு தெரியாது ஆனால் கற்பூரத்தின் துகள்கள் வெள்ளை காகிதத்தில் படும்.

- Advertisement -

அதன் பின்பு அந்த வெள்ளைக் காகிதத்தின் மேல் ஐந்து மிளகுகளை வைத்து, அந்த காகிதத்தை எரித்து  விட்டாலே போதும். உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களுடைய கெட்ட எண்ணம், எதிர்மறை ஆற்றல், அவர்கள் உங்களுக்கு கெடுதல் நினைத்து பில்லி சூனியம் ஏவல் வைத்தால் கூட, அது உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எரித்த காகித குப்பையை அப்படியே கை படாமல் அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம்.

paper

சரி, இந்த எதிர்மறை ஆற்றல் எல்லாம் திரும்பவும், நம் எதிரியை போய் சேருமா? நம்முடைய எதிரிக்கு ஏதேனும் பிரச்சனை வருமா? எதிரிகளுக்கும் தீங்கு விளைவிக்குமா? என்றால் நிச்சயம் கிடையாது. இந்த பரிகாரத்தை நீங்கள் செய்த பின்பு, உங்கள் எதிரிகள், உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம் உண்டு.

Milagu benefits in Tamil

நண்பர்கள் இல்லாதவர்கள் கூட இந்த உலகத்தில் கட்டாயம் இருப்பார்கள். உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் எதிரி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். உங்களுடைய எதிரியிடமிருந்து, உங்களுடைய எதிரியின் கண் பார்வையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தைத்திருநாள்(14/1/2021) பொங்கல் வைக்க ‘நல்ல நேரம்’ எது? மிக எளிதாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.