எதிரியை தோற்கடிக்க வாராகி வழிபாடு

varahi1
- Advertisement -

ஒரு சிலரை எல்லாம் பார்த்தாலே பயம் வரும். அரக்கன் போல இருப்பார்கள். தோற்றம் கிடையாது, சுபாவம். இப்படிப்பட்ட மனிதர்களிடம் பேசக்கூட முடியாது. சிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இவன் ரொம்பவும் ஏகத்தாளம் பிடித்தவன், ரொம்பவும் திமிரு பிடித்தவன், இவனிடம் பேசி ஜெயிக்கவே முடியாது. இவனிடம் மோதி ஜெயித்தவர்கள் யாருமே இல்லை என்று சொல்லுவார்கள்.

அப்பேர்பட்ட ஒருவன் நமக்கு எதிரியாக மாறி இருப்பான். காலமும் சூழ்நிலையும் நம்மை விட பல மடங்கு பலம் கொண்டவனை, நமக்கு எதிரியாக மாற்றி இருக்கும். இப்படிப்பட்ட எதிரிகளை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பெண்களுக்கும் இப்படிப்பட்ட எதிரிகள் இருப்பார்கள். ஆண்களுக்கும் இப்படிப்பட்ட எதிரிகள் இருப்பார்கள். தொழிலில் எதிரிகள் இருப்பார்கள். சொந்த பந்தத்தில் கூட எதிரிகள் இருப்பார்கள்.

- Advertisement -

நம்மை விட பலம் வாய்ந்த எதிரியை எதிர்த்துப் போராடி ஜெயிப்பது எப்படி. குறுக்கு வழியில் போகக்கூடாது. அவனை முதுகில் குத்த கூடாது. நேரடியாக நின்று சண்டை போட்டு ஜெயிக்க ஆன்மீகத்தில் ஒரு எளிய வழிபாடு உள்ளது. அந்த வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இதோடு சேர்த்து உங்களுடைய எதிரிகள் உங்களை வீழ்த்த எதிர்மறை ஆற்றலை ஏவி விட்டிருந்தாலும், அதை வீழ்த்தவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எதிரிகளை துவம்சம் செய்யும் ஆன்மீகம் வாராஹி வழிபாடு இது.

எதிரிகளை ஜெயிக்க வாராஹி வழிபாடு

வராஹி வழிபாடு என்ற உடனே எல்லோரும் மனதிலும் பயம் இருக்கும். பயப்படாதீங்க, எதிரியை வீழ்த்தி துவம்சம் செய்ய இவளைத்தான் சரணாகதி அடைய வேண்டும். தினமும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை செய்ய வேண்டும். வீட்டில் வாராஹி திருவுருவப்படம், சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

வராஹின் திருவுருவப் படம் இருந்தால் அந்த படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி பூவை போட்டு வாராகிக்கு சுட சுட ஒரு பிரசாதம் நெய்வேதியமாக தயார் செய்ய வேண்டும். சிலை இருந்தால் 48 நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாடு செய்யும்போது, அந்த சிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி பூ வைக்க வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏதாவது ஒரு நெய்வேதியம் செய்யுங்கள். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, கேசரி, இப்படி ஏதோ ஒரு நெய்வேதியம். கிழங்கு வகைகளை அவித்து வைத்தால் கூட போதும். வராகி திருவுருவப்படத்திற்கு முன்பு நிவேதியம் வைத்து, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

திருவுருவப்படம் சிலை இருந்தால் அதற்கு முன்பாக ஒரு வெற்றிலியை வைத்து ‘ஓம் ஆதிவாராகி போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்ய வேண்டும். 48 நாளும் இதே குங்குமத்தை வைத்து நீங்கள் அர்ச்சனை செய்யலாம்‌. குங்குமத்தை மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. 48 நாள் வாராஹி மந்திரத்தை சொல்லி சொல்லி அந்த குங்குமத்தை உருவேற்ற போகிறீர்கள். அதுவும் பிரம்ம முகூர்த்த நேரத்தில்.

இந்த குங்கும அர்ச்சனையை முடித்துவிட்டு கற்பூரம் ஊதுபத்தி ஆராத்தி காண்பித்து, உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வராகி மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு வர எதிரியை எதிர்த்துப் போராடும் தைரியம் உங்களுக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும், இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, எதிரியோடு மோதினால் வெற்றி உங்களுக்கே.

மோதுவது என்றால் அடித்து சண்டை போடுவது கிடையாது. போட்டி போட்டு ஜெயிப்பது.  எதிர்ப்புகளை சந்திக்க செல்லும் போது இந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு, வாராயே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். தினமும் கூட இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளலாம் தவறு கிடையாது. வாராகியின் திருவுருவப்படம் இல்லை என்றால் காமாட்சியம்மன் விளக்குக்கு முன்பாக இந்த குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தை மாத கடைசி வெள்ளி செய்ய வேண்டிய வழிபாடு

அந்த தீபச்சுடர்தான் வாராகித்தாய் என்று நினைத்துக் கொள்ளுங்கள். 48 நாள் பிரம்ம முகூர்த்த நேரம் அதாவது காலை 4:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள் இந்த பூஜையை நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும். இப்படி செய்பவர்கள் வாழ்க்கையில் எதிரி தொல்லையில் இருந்து விடுபடலாம். ஏவல் பில்லி சூனியத்தை எல்லாம் ஒன்றும் இல்லாமல் துவம்சம் ஆக்கிவிடலாம். பெண்களால் இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாள் செய்ய முடியாது‌. மாதவிடாய் நாட்களை விட்டுவிட்டு பின்பு பூஜை தொடரலாம்.

- Advertisement -