தக்காளி ஜூஸை இப்படி குடித்தால் இவ்வளவு சத்து கிடைக்குமா? சீதாப்பழம் சாப்பிட்டால் குண்டாகலாமா? பயனுள்ள சமையல் சங்கதிகள் 10!

tomato-juice-idly-maavu
- Advertisement -

நம் கண்முன்னே ஆரோக்கியம் இருந்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிடுகிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் எந்த பொருளில் எது கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளாத நம் அறியாமை தான். சிறு சிறு விஷயங்களில் கூட ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் அவற்றை விடுத்து ஆரோக்கியமற்ற சில உணவு முறை பழக்க வழக்கங்களால் நம்முடைய ஆரோக்கியம் பெருமளவு பாதித்து வருவது கவனிக்கத்தக்க ஒன்று. அவ்வகையில் நமக்கு தெரிய வேண்டிய சில முக்கிய பயனுள்ள சமையல் சங்கதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

tomato

குறிப்பு 1:
ஜுஸ் என்றால் விலை உயர்ந்த பழங்களை வாங்கி தான் போட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. தக்காளி குறைந்த விலையில் கிடைக்கும் பொழுது அதனை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். தக்காளி ஜூஸ் உடன் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து பருகினால் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக கிடைக்கும். பெண்கள் தொடர்ந்து இதை குடித்து வர நாட்பட்ட நோய்கள் நீங்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
அடிக்கும் வெயிலில் இட்லி மாவு வெகு விரைவாக புளித்து விடுகிறதா? மாவை அரைக்கும் பொழுது அதில் கொஞ்சம் சர்க்கரை தூவி விடுங்கள். மாவு வேகமாக புளிக்காது மேலும் இட்லி தோசை மெத்தென்று பஞ்சு போல சுவையானதாக வரும்.

puthina

குறிப்பு 3:
கடுங்காப்பி போடுவது போல புதினா இலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு அதனுடன் எலுமிச்சை சாறு நான்கைந்து சொட்டுகள் கலந்து எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்தால் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் உடனே நீங்கும். புது புத்துணர்வு ஏற்படும்.

- Advertisement -

குறிப்பு 4:
சீதாப்பழம் சீசன்களில் கிடைக்கும் பொழுது அதனை தவறாமல் வாங்கி உண்ண பழகிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சத்துக்கள் இதயத்தை வலுப்பெறச் செய்யும். மேலும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் இதனை சாப்பிட்டால் உடல் புஷ்டி பெறும். மிகவும் குளிர்ச்சி பொருந்திய இந்த பழம் உஷ்ணத்தை தனித்து பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

குறிப்பு 5:
நீங்கள் காலையில் பொங்கல் செய்யும் பொழுது அவசரத்தில் பாசி பருப்பை வறுக்காமல் போட்டு செய்தால் அதில் ருசி இருக்காது. வெறும் கடாயில் லேசாக பாசிப் பருப்பை வறுத்து பின்னர் பொங்கல் செய்து சாப்பிட்டால் அதில் ருசி கூடும்.

- Advertisement -

குறிப்பு 6:
அதிரசம் செய்பவர்கள் மெஷினிலிருந்து அரைத்து வந்த மாவில் தண்ணீருடன் கொஞ்சம் பாலையும் சேர்த்து கலந்து பின்னர் வெல்லப்பாகு விட்டு பிசைந்து அதிரசம் சுட்டால் கெட்டியாக இல்லாமல் மிருதுவாக நன்றாக அதிரசம் வரும்.

kadugu 4-compressed

குறிப்பு 7:
இடுப்பு வலி பாடாய் படுத்தும் பொழுது கொஞ்சம் கடுகு எண்ணெயை சுட வைத்து சூடு பொறுக்கும் அளவிற்கு இடுப்பில் விட்டு உருவி விட வலி இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும்.

குறிப்பு 8:
நெஞ்சு வலி, நெஞ்சடைப்பு போன்ற பிரச்சினைகள் சட்டென நீங்க அவசரத்திற்கு கொஞ்சம் செம்பருத்தி பூவை பறித்து வந்து அதனை தண்ணீர் ஊற்றி சுட வைத்து காய்ச்சி வடிகட்டி பின் தேன் கலந்து கஷாயம் செய்து பருகினால் உடனே தீர்வு கிடைக்கும்.

vepilai

குறிப்பு 9:
திடீரென கை, கால்களில் அடிப்பட்டு விட்டால் பதற்றம் கொள்ளாமல் கொஞ்சம் மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து மைய அரைத்து அடிபட்ட இடங்களில் தடவி வர விரைவாக ஆறிவிடும்.

குறிப்பு 10:
வீட்டில் முறுக்கு, தட்டை, சீடை எல்லாம் செய்யும் பொழுது அதன் சுவை அதிகரிக்கவும், மேலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கவும் கொஞ்சம் அந்த மாவுடன் தேங்காய் பால் சேர்த்து முறுக்கு பிழிந்தால் போதும்.

- Advertisement -