ஹோட்டல் சுவையில் இப்படி ஒருமுறை டிபன் சாம்பார் வைத்து பாருங்கள். இந்த சாம்பார் வாசத்தில் உங்கள் வீடு அப்படியே மணக்கும்.

idli-sambar-recipe
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள விதவிதமாக நிறைய வகைகளில் சாம்பார் வைக்கலாம். ஆனால் ஹோட்டல் சுவையில் மணக்க மணக்க ஒரு டிபன் சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிரஷ்ஷாக மசாலாவை அரைத்து ஊற்றி இந்த சாம்பாரை வைத்தால் 2 இட்லி, 4 தோசை அதிகமாக உள்ளே இறங்கும். அந்த அளவிற்கு சுவையான சாம்பார் ரெசிபி உங்களுக்காக.

முதலில் 2 கைப்பிடி துவரம்பருப்பு, 1 கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்து கொஞ்சமாக பெருங்காயம், 4 பூண்டு பல், மஞ்சள் தூள் போட்டு பருப்பை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த பருப்பு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய் – 5 லிருந்து 7, வர மல்லி – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 2 சிறிய கட்டி துண்டுகள், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து சிவக்க சிவக்க வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் போட்டு கடாய் சூட்டிலேயே வதக்கி இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சாம்பாரை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – 1 கொத்து, இரண்டாக வெட்டிய சின்ன வெங்காயம் – 10 பல், சேர்த்து தக்காளியை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு, தூவி தக்காளி பழத்தை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக புளித்தண்ணீர் – 3 டேபிள்ஸ்பூன், அளவு ஊற்றி நன்றாக 2 நிமிடம் போல கொதிக்க வையுங்கள். அதன் பின்பு குக்கரில் வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் ஊற்றவேண்டும். அடுத்தபடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை ஊற்றி சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு சாம்பாரை மிதமான தீயில் தளதளவென கொதிக்க வையுங்கள்.

பருப்பின் பச்சை வாடை அனைத்தும் நீங்கிய பின்பு, இறுதியாக கொத்தமல்லி தலை தூவி, வெல்லம் – 1/2 ஸ்பூன் போட்டு, 1 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி, சாம்பாரை ஒரு மூடி போட்டு மூடி வையுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து இந்த சாம்பாரை திறந்தால் உங்களுடைய வீடு அப்படியே சாம்பார் வாசத்தில் மணக்கும். ட்ரை பண்ணி பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -