இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ள சரவணபவன் ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த வெஜிடபிள் குருமாவை ஒருமுறை செய்து பாருங்கள்

kuruma
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்யப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் எவ்வளவு சுவையாக செய்தாலும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அவற்றின் சுவை குறைவாகவே தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் ஹோட்டலில் சாப்பிடும் சுவையை வீட்டிலேயும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சில ஓட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கின்ற உணவு வகைகளை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். அதற்காக அவர்கள் செய்யும் சிறிய குறிப்புகளை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அப்படி சரவணபவன் ஓட்டல் குருமாவின் ரகசியம் என்னவென்றும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

onion-chutni

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 2, கேரட் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 100 கிராம், பீன்ஸ் – 100 கிராம், பச்சைப் பட்டாணி – 100 கிராம், மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, முந்திரிபருப்பு – 10, தயிர் – அரை கப், பால் – அரை கப், நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பட்டை சிறிய துண்டு – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன்பின் ஒரு சிறிய பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

vegetables

பின்னர் அடுப்பைப் பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு குக்கரில் இந்த காய்கறி பாத்திரத்தை வைத்து விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை இறக்கி விட்டு ஒரு கடாயை வைக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

veg-kuruma

பின்னர் வேக வைத்துள்ள காய்கறிகளையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொண்டு, அதனுடன் 10 முந்திரியையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து, காய்கறிகளுடன் சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து நன்றாகக் கொதித்ததும் அரை கப் பால் சேர்த்து, கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சரவணபவன் ஹோட்டல் சுவையில் வெஜிடபிள் குருமா தயாராகிவிட்டது.

- Advertisement -