இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்

Perumal

முந்தைய நாள் இரவு திரை மூடப்பட்டு பின் அடுத்த நாள் திரை திறக்கப்படும்போது பகவானை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய விசுவரூப தரிசனத்தை காண மக்கள் வரிசையாக ஒரு கோவிலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வரிசையில் கண்பார்வையற்ற 10 நபர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

perumal

பகவானின் விஸ்வரூப தரிசனத்தை நம்மால் காண முடியும் ஆனால் கண் பார்வையற்ற இவர்களால் பகவானை எப்படி காண முடியும் ?. எதற்காக இவளவு சிரமப்பட்டு அதிகாலையில் இவர்கள் வந்துள்ளனர் என்ற சந்தேகம் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு ஏற்பட்டது. தன் சந்தேகத்தை எப்படியாவது தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

அப்போது அங்கு ஒரு குருக்கள் வந்தார். இவரிடமே நம் சந்தேகத்தை கேட்டுவிடலாம் என்று தீர்மானித்த அந்த நபர் தன்னுடைய சந்தேகத்தை பற்றி விரிவாக அந்த குருக்களிடம் கூறினார். இதை கேட்டு சிரித்த அந்த குருக்கள், நீங்கள் விஸ்வரூப தரிசனத்திற்குரிய பொருளை தவறாக புரிந்துகொண்டுளீர்கள் அதனால் ஏற்பட்ட சந்தேகம் தான் இது என்றார்.

people in temple

அந்த நபருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என்ன தவறாக புரிந்துகொண்டேன் என்றார். குருக்கள் சிரித்தபடியே விஷரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன என்பதை விளக்க ஆரமித்தார். விச்வரூப தரிசனம் என்பது நீங்கள் நினைப்பது போல அதிகாலையில் முதன் முதலாக பகவானை காண்பது அல்ல.

perumal

இதையும் பார்க்கலாமே:
பக்தர்கள் தீ மிதிக்கும் அற்புத காட்சி – வீடியோ

அதிகாலையில் முதன் முதலாக பகவான் நம்மை காண்பதே விச்வரூப தரிசனத்தின் உண்மையான பொருள். கருவறையின் திரை விலகியவுடன், விடியற்காலையில் நம்மை காண யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பகவான் பார்ப்பார். அப்போது பகவானின் பார்வை நம் மீது விழும் இதுவே விஸ்வரூப தரிசனம். ஆகையால் இங்கு கூடி இருக்கும் கண் பார்வையற்றவர்கள் மீதும் பகவானின் பார்வை படும். அதை அவர்களால் உணர முடியும் அதனாலேயே அவர்கள் விஸ்வரூப தரிசனத்தை காண வந்துள்ளனர் என்றார் அந்த குருக்கள்.