இட்லிக்கு மாவு அரைக்கிற பக்குவம் தவறவே தவறாது. இந்த 1 பொருளை சேர்த்து இட்லிக்கு மாவை இப்படி ஆட்டுங்க, சும்மா பஞ்சு மாதிரி சாப்டான இட்லி கிடைக்கும்.

idli-mavu
- Advertisement -

பஞ்சு போல இட்லி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அவ்வளவு சாஃப்ட்டான இட்லிக்கு மாவு அரைக்கக்கூடிய பக்குவம் நிறைய பேருக்கு தெரியாது. சில சமயம் ரொம்பவும் பித பிதன்னு இட்லி வந்துரும். சில சமயம் ரொம்பவும் கல்லு போல இட்லி வந்துரும். ரோட்டு கடைகளிலோ அல்லது பாட்டி கடைகளிலோ சாப்பிடும் அளவிற்கு சாப்டான ஒரு இட்லி நம்ம வீட்ல செய்யவே முடியாது. காரணம் வெளியிடங்களில் மாவு ஆட்டி கரைத்து வைக்கும் போது சோடா உப்பு சேர்க்கும் வழக்கம் இருக்கும். சோடா உப்பை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு அத்தனை ஆரோக்கியம் கிடையாது.

இந்த சோடா உப்புக்கு பதில் சோயா பீன்சை சேர்த்து இட்லி மாவை ஆட்டிப் பாருங்கள். ரோட்டு கடைகளில் கிடைக்கும் அதே சூப்பர் இட்லியை நம்முடைய வீட்டிலும் செய்யலாம். வாங்க எந்தெந்த அளவுகளில் இந்த இட்லிக்கு அரிசி உளுந்து ஊற வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப், சோயா பீன்ஸ் – 1 பெரிய டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், இந்த அளவுகளில் முதலில் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசி தண்ணீரில் 4 மணி நேரம் ஊறினால் போதும். உளுந்து – 1 மணி நேரம் ஊறினால் போதும். ஆனால் வெந்தயமும் சோயா பீன்ஸ் கட்டாயமாக 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அரிசியை தனி பாத்திரத்தில் போட்டுக்கோங்க. உளுந்தை தனி பாத்திரத்தில் போட்டுக்கோங்க. சோயாபீன்ஸையும் வெந்தயத்தையும் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அரிசி பருப்பை கழுவுவதிலும் பக்குவம் இருக்கிறது நன்றாக நான்கிலிருந்து ஐந்து முறை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக கழுவி விடுங்கள். நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்கும்போது அந்த தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டும். அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இட்லி பார்ப்பதற்காக அப்போதுதான் வெள்ளையாக சூப்பராக வரும்.

- Advertisement -

எல்லா பொருட்களும் சரியான அளவு தண்ணீரில் ஊறி விட்டது. கிரைண்டரை எடுத்துக்கோங்க முதலில் சோயாபீன்சையும் வெந்தயத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் புசுபுசுவென ஆட்டி கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளிக்க வேண்டும். அடுத்து ஊற வைத்த உளுந்தம் பருப்பை தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு ஆட்ட வேண்டும். சோயாபீன்ஸ் வெந்தயம் அரைபட்டு இருக்கிறது அல்லவா. அதோடு உளுந்தை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் தண்ணீரை ஊற்றி பொங்க பொங்க உளுந்தை ஆட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அரிசியைப் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி ஏழிலிருந்து எட்டு மணி நேரத்திற்குள் நன்றாக மைய அரைத்து நமக்கு கிடைத்துவிடும் நல்ல நைசாகவே ஆட்டி அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவோடு அரிசியை சேர்த்து உங்கள் கையைக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கரைத்து ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். மாவு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாக புளிக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான அதே நேரத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் திணை தக்காளி சாதம். அது எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

புளித்து வந்த மாவை கரண்டியை கொண்டு நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு இட்லி தட்டில் மாவை ஊற்றிக் கொள்ளுங்கள். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். இட்லி தட்டை அதன் பின்பு இட்லி பானையில் வைத்து ஹை ஃப்ளேமில் 5 நிமிடங்கள் வேகவைத்து, அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் இட்லி சூப்பராக பொங்கி வந்திருக்கும். உங்கள் இட்லியோட பக்குவம் மிஸ்ஸே ஆகாது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -