பிறரிடமிருந்து இந்த பொருட்களை கடனாக வாங்கினாலும், இரவலாக வாங்கினாலும் நாம் துரதிர்ஷ்டசாலிகளாக மாறி, வறுமையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

cash-sadman

முதலில் நம்மிடம் இல்லாத ஒரு பொருள் அடுத்தவர்களிடம் இருக்கும் போது, அந்தப் பொருளை பார்த்து அதை நாமும் வாங்க வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறான ஒரு விஷயம். அவர்களுக்குத் தேவைப்படும் அந்த குறிப்பிட்ட ஒரு பொருள், நம்முடைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படாத ஒன்றாக இருக்கும். அதை நாம் வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு எந்த பயனும் இருக்காது. இருப்பினும் ஆடம்பரத்துக்காக, ஆசைக்காக அடுத்தவர்கள் கையில் வைத்திருக்கும் பொருளை நாம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்துவிட்டாலே, அது நமக்கு வறுமையை உண்டாக்கி விடும்.

cash

நம்முடைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக அவசியமாக எந்தெந்த பொருட்கள் தேவை? நம்முடைய வருமானத்திற்கு ஏற்றவாறு அந்த பொருட்கள் நம்மிடம் உள்ளதா? அதை வைத்து நாம் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். நம்மை விட வசதி படைத்தவர்கள் கையில் இருக்கும் பொருட்களை பார்த்து ஆசைப்பட்டு அதை நாம் அடைய வேண்டும் என்ற எண்ணம் என்றும் நமக்கு வரவே கூடாது. இது நம்மை முதலில் கடனாளியாக மாற்றி, துரதிர்ஷ்டசாலிகளாக மாற்றி விடும்.

அந்த வரிசையில், முதலில் அடுத்தவர்களிடம் இருந்து நாம் வாங்கவே கூடாது ஒரு பொருள். அதுதான் பணம். இந்தப் பணத்தை நாம் அடுத்தவர்கள் கையிலிருந்து வாங்கினால் அதை கடன் என்று சொல்லுவார்கள். நம் கையில் பணம் இல்லை என்றால், நம்முடைய செலவுகளை தான் குறைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டுமே தவிர அடுத்தவர்கள் கையில் இருக்கும் பணத்தை கடனாக வாங்கி செலவு செய்யவே கூடாது.

watch3

சில பேரது கையில் இருந்து பெறப்படும் பணம் கூட நமக்கு துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். அதன் பின்பு, அந்தக் கடனுக்கு வட்டியை கட்டி நாம் வறுமையில் சிக்கி கொள்ளும் நிலை வந்துவிடும். இந்த கடன் நமக்கு நிறைய பகைகளை கூட உண்டாக்கி விடும். முடிந்தவரை அடுத்தவர்கள் கையிலிருந்து உங்களுடைய தேவைக்காக கடனாக பணம் வாங்கும் பழக்கத்தை இன்றிலிருந்தே நிறுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இன்றைய சூழ்நிலையில் அடுத்தவர்கள் கையில் இருக்கும் அழகான பொருட்களை பார்க்கும்போது, அதை நாமும் ஒருமுறை அணைந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்குள் வந்து விடுகின்றது. அந்த வரிசையில் அடுத்தவர்கள் அணிந்த காலனி, கைகடிகாரம், மோதிரம், உடைகள், நகைகள், தங்க நகைகளாக இருந்தாலும் சரி, கவரிங் நகைகள் ஆக இருந்தாலும் சரி, அதை நாம் வாங்கி அணிந்து கொள்ளக் கூடாது.

cheppal

சிலபேர் அடுத்தவர்கள் அணிந்து கொண்டிருக்கும் அழகான பொருட்களைப் பார்த்தால் விடவே மாட்டார்கள். இதை தான் அணிந்து கொண்டால், எப்படி இருக்கும் என்று அவர்களிடம், அந்த பொருளை இரவலாக வாங்கி அணிந்து பார்ப்பார்கள். இப்போதெல்லாம் இப்படி இரவல் பொருட்களை வாங்கிப் போட்டு, செல்ஃபி எடுத்து கொள்வதை ஃபேஷனாக வைத்துள்ளார்கள். இது மிகப்பெரிய தவறு. இதோடு மட்டுமல்லாமல் அந்த பொருளை ஒரு நாளைக்கு கடன் வாங்கி, இவர்களும் வெளியிடங்களுக்கு அணிந்துகொண்டு சென்று வர வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த குணம் இருந்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் உங்களால் முன்னேறவே முடியாது.

hand-bag

இப்படியாக அடுத்தவர்களுடைய பொருளை நாம் வாங்கிப் போட்டுக் கொண்டால், அவர்களுடைய துரதிருஷ்டம் நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளுமா? என்ற சந்தேகம் நமக்குள் வருவதைவிட, அடுத்தவர்களுடைய பொருளுக்கு நாம் ஆசைப்படும் அந்த குணம், நமக்கு என்றுமே நல்லதை கொடுக்காது. துரதிர்ஷ்டத்தை தான் தேடித்தரும்.

kadan

நாமும் அதேபோல் ஆடம்பரமான அழகான பொருட்களை வாங்க வேண்டும், நாமும் அந்த பொருட்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் நம்மை கடன் வாங்கத் தூண்டும். கடன் வாங்கி ஆடம்பர பொருட்களை வாங்கி, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதன் மூலம், நிச்சயமாக நம்மை துரதிஷ்டம் சூழ ஆரம்பித்து விடும். அதன் பின்பு வாழ்க்கையின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு, வாழ்க்கையில் தோற்றுப் போவதற்கு இப்படிப்பட்ட சில பழக்கவழக்கங்களே முதல் காரணமாக மாறிவிடும். ஆக இப்படி இரவல் வாங்கும், கடன் வாங்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நமக்கு சொந்தமில்லாத, அடுத்தவர்களிடம் இருக்கும் பொருளுக்கு நாம் என்றுமே ஆசைப்படக் கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.