கடன் பிரச்சினை தீர உதவும் தீபம்.

kadan deepam
- Advertisement -

வாழ்க்கையில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுவது நிம்மதியான தூக்கம். இந்த நிம்மதியான தூக்கம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் எவராலும் நிம்மதியாக தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கும் அதே சமயம் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி அடைவதற்கும் உதவக்கூடிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பை பொறுத்து அவருடைய வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. ஒரு சில கிரகங்களின் பாதிப்பால் இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு அதனால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படி வாங்கிய கடனை திருப்ப திரும்ப திரும்ப அடிப்பதற்காக பல முயற்சிகளை செய்தாலும் ஒரு சிலரால் அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியாது அப்படிப்பட்டவர்கள் கடைசி காலம் வரை வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக தீப வழிபாடு என்பது நம்முடைய தமிழர்களின் பண்பாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு வழிப்பாடாகும். எந்த தெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் தீபத்தில் நிலைத்து நின்று நமக்கு அருள் புரியும் என்பது நம்முடைய நம்பிக்கை. இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்திற்கு அகல் விளக்கை வாங்கி கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு ஒரு சிறிய தாம்பாளத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். தாம்பாளம் இல்லாதவர்கள் வெற்றிலை, வாழை இலை, மா இலை, அரச இலை என்று ஏதாவது ஒரு இலையின் மேல் வைத்து தீபம் ஏற்றலாம். இந்த அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் சிறிது மருதாணி விதைகளை போட வேண்டும்.

- Advertisement -

பிறகு நான்கு டைமண்ட் கற்கண்டு போட்டு தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றிய தீபத்தின் தீபச்சுடரை பார்த்தவாறு நம்முடைய குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு பிறகு இஷ்ட தெய்வத்தையும் நினைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து “நான் வாங்கிய கடனை அடைப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கடனை எதிர்மறை வார்த்தையாக நினைப்பவர்கள் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்றும் பொழுது அதில் இருக்கும் மருதாணி விதை, டைமன் கற்கண்டு போன்றவற்றை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, அகல் விளக்கை சுத்தம் செய்து புதிதாக மருதாணி விதை, டைமண்ட் கற்கண்டு, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் முடிய தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது

இவ்வாறு செவ்வாய்க்கிழமை தோறும் நாம் தீபம் ஏற்றி வழிபட்டு வர அந்த தீபத்தின் அருளாலும், மகாலட்சுமி தாயாரின் அருளாலும் நம்முடைய கடன் பிரச்சனை என்பது படிப்படியாக குறைவதற்குரிய வழிகளை நமக்கு காட்டுவார்கள்.

- Advertisement -