கடலளவு கடனும் காணாமல் போக இன்று ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையுடன் கூடிய வளர்பிறை அஷ்டமியில் அம்பிகைக்கு இதை தவறாமல் செய்து விடுங்கள்.

- Advertisement -

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள் தான். அதிலும் குறிப்பாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு போன்ற நாட்கள் அம்பிகைக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் நாம் அம்பிகையை வழிபடும் போது நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும். அம்பிகையே தவமிருந்து இந்த மாதத்தில் தான் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார். அத்தகைய சிறப்புமிக்க இந்த காலத்தில் நாம் அம்பிகையை வேண்டும் போது நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்புமிக்க இந்த மாதத்தில் அம்பிகையை நாம் எப்படி வணங்குவதால் நம்முடைய கடனானது அடையும் என்பதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாகவே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையில் செய்யும் பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் அதுவும் வளர்பிறை அஷ்டமியில் நாம் செய்யும் இந்த வழிபாடு எத்தனை பெரிய கடனையும் சீக்கிரம் அடைவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

- Advertisement -

ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கடன் அடைய செய்ய வேண்டியது:
இந்த பதிவில் கடன் அடைய துர்க்கை அம்மனை எப்படி வணங்குவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய செவ்வாய், வெள்ளி இரண்டுமே உகந்த நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் இந்த நாட்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.

செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வணங்கும் பொழுது நம்முடைய கடன் அனைத்தும் காணாமல் போகக் கூடிய வாய்ப்புகள் பெருகும். இது மட்டுமின்றி நம் இல்லத்தில் உள்ள அனைத்து இன்னல்களையும் தீர்க்கக் கூடிய சக்தியும் இந்த எலுமிச்சை பழ மாலைக்கு உண்டு. ஏனெனில் கனிகளில் ராஜகனி என்ற பெயர் கொண்ட இந்த எலுமிச்சை கனியானது துர்க்கை அம்மனின் மற்றொரு சுரூபமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இத்தகைய சிறப்புமிக்க இந்த நாளில் சிறப்புமிக்க இந்த அம்பிகைக்குரிய பொருளையே இவர்களுக்கு மாலை சூட்டி வணங்கும் பொழுது நம்முடைய துன்பங்கள் பெருமளவு குறையும். இந்த எலுமிச்சை கனியை ஒற்றை எண்ணில் முடியும்படி கோர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் . இதில் எத்தனை கனிகள் கோர்க்க முடியுமோ அது உங்களுடைய விருப்பத்தை பொறுத்தது கோர்த்த பிறகு துர்க்கை அம்மனுக்கு இந்த மாலையை சாற்றி எலுமிச்சை பழ தீபம் ஏற்றி அம்மனை வணங்கி வரும் போது நிச்சயம் உங்களுடைய கடன் அடையும்.

அதே நேரத்தில் அஷ்டமி ஆனது பைரவருக்கும் உகந்த நாள் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி மிக மிக விசேஷமானது. துர்க்கை அம்மனுக்கு மாலை சூட்டி விளக்கேற்றிய பிறகு பைரவருக்கும் தீபம் ஏற்றி கடன் அடைய வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். கடனை அடைப்பதில் உறுதுணையாக இருக்கும் முக்கியமான தெய்வங்களில் பைரவரும் உண்டு.

இதையும் படிக்கலாமே: இரவு நேரத்தில் தூங்கும் பொழுது தலையணைக்கு அருகில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து கொண்டு அறியாமல் கூட தூங்காதீர்கள்! பெரிய பிரச்சனை வரும்.

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பொருந்திய இந்த நாளை சிறிதும் தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டு நம்முடைய கடன்களை பெரும் அளவுக்கு குறைந்து கடனில்லா வாழ்வை வாழ அம்பிகையும் பைரவரின் அருள் ஆசையும் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -