vinayagar agathi ilai
- Advertisement -

எந்த ஒரு காரியத்தையும் தடையின்றி செய்வதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும் என்பதால்தான் காரியத்தை செய்வதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்யும் முறை இருந்து வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானை கடன் நிவர்த்தி ஆவதற்காக எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகப் பெருமானுக்கு என்று பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அதில் சில வழிபாட்டு முறைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் சங்கடஹர சதுர்த்தி விரதம். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயக பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி நாளை சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி நாளன்று நாம் பெரிதாக எந்த வழிபாட்டையும் செய்வதில்லை. ஆனால் இந்த வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று நாம் விநாயகர் பெருமானுக்கு வழிபாடு செய்தால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும்.

கடன் தீர விநாயகர் வழிபாடு

வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை நாம் கண்டிப்பான முறையில் வழிபட வேண்டும். அப்படி நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் பல நன்மைகள் நமக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கஷ்டங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றும் மகிழ்ச்சிகள் நிறைய வளர்பிறை சதுர்த்தி நாள் அன்றும் விநாயகர் பெருமானை நாம் வழிபட வேண்டும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட வளர்பிறை சதுர்த்தி நாளன்று பசு மாட்டிற்கு தானமாக தரக்கூடிய அகத்திக் கீரையை வாங்கி வந்து இலைகளை மட்டும் தனியாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் எமகண்ட வேளையில் விநாயகப் பெருமானுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் இலுப்ப எண்ணையை ஊற்றி சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் அகத்திக் கீரையை எடுத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த முறையில் நாம் அர்ச்சனை செய்து அவரை வழிபட்டு வந்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும். பணவரவு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு

வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டு அர்ச்சனை செய்து வருபவர்களின் வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -