வெறும் 1 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் போதும். நீண்ட நாட்களாக அடைக்க முடியாத பல கோடி ரூபாய் கடனை கூட சுலபமாக அடைந்து விடலாம்.

perumal

மனது இருந்தால் மார்க்கம் உண்டு. நம்பிக்கை இருந்தால் ஒரு சிறிய கயிறை கட்டி கூட மலையை இழுக்கலாம் என்று சொல்லுவார்கள். அதன்படி நம்பிக்கையோடு மனதார நாம் எதை நினைத்தாலும் அது உடனடியாக நிறைவேறி விடும். இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய பதிவிற்கு செல்வோம். உங்கள் கையில் இருக்கும் ஒரு ரூபாயை வைத்து உங்கள் கடன் பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்? என்ற சந்தேகம் இந்தத் தலைப்பை படித்த எல்லார் மனதிலும் எழுந்து இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையோடு உங்கள் கையில் இருக்கும் ஒரு ரூபாயை இறைவனை வேண்டி குறிப்பாக அந்தப் பெருமாளை வேண்டி இப்படி முடிந்து வையுங்கள். நிச்சயமாக கழுத்தை நெரிக்கும் கடன் கூட கூடிய விரைவில் காணாமல் போய்விடும்.

perumal-1

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றே பூஜை அறைக்குச் செல்லுங்கள். பெருமாளை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெறும் 1 ரூபாய் நாணயத்தை வையுங்கள். அதனுடன் ஒரு விரலி மஞ்சள், துளசி இலை 2 இந்த மூன்று பொருட்களையும் வைத்து, மனதில் நம்பிக்கையோடு இந்த முடிச்சை ஒரு மஞ்சள் நிற நூலால் கட்டி பெருமாளின் பாதங்களில் வைக்க வேண்டும். (ஒரு ரூபாய் நாணயம், விரலி மஞ்சள், துளசி இலை.)

‘என்னுடைய கடன் பிரச்சினையை உன் பாதங்களில் ஒப்படைத்துவிட்டேன். எப்படியாவது தீர்த்து வைக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று பிரார்த்தனை செய்து, மனதார வேண்டிக்கொண்டு அந்த முடிச்சை பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் பாதங்களில் சேர்த்து விடுங்கள். உங்கள் கடன் முடியும் வரை அது அங்கேயே இருக்கட்டும்.

yellow-handkerchief

பூஜை அறையை சுத்தம் செய்யும் போது மட்டும் அந்த முடிச்சினை வேறு இடத்தில் எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு அந்த முடிச்சை கொண்டுவந்து பெருமாளின் காலடியிலேயே வைத்துவிடுங்கள். ஆனால் உங்களுடைய கடனை அடைப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அந்த முயற்சியையும் கைவிடக் கூடாது. அதை முழு மூச்சோடு செய்து கொண்டே வர வேண்டும்.

- Advertisement -

தினமும் காலை எழுந்தவுடன் பெருமாளிடம் ‘கடன் அடைய வேண்டும்’ என்ற வேண்டுதலை மட்டும் தவறாமல் செய்துவர வேண்டும் உங்களுடைய கடன் படிப்படியாக குறைவதற்கு என்ன வழிகள் தேவையோ அதை அந்த பெருமாள் செய்து தருவார். உங்களுடைய முயற்சிகளுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார்.

virali-manjal

உங்களுடைய கடன் பிரச்சனை எப்போது தீறுகின்றதோ, எப்போது ஒரு ரூபாய் கூட பாக்கியில்லாமல் கடனை அடைக்கிறீர்களோ, அப்போது அந்த முடிச்சை கொண்டுபோய் பெருமாளின் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

manjal-mudichu

முடிந்தால் திருப்பதிக்கு சென்று திருப்பதி பெருமாள் கோவிலில் இந்த முடிச்சை சேர்ப்பதாக வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே வெளிவந்து விடுவீர்கள். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். ஆனால் நம்பிக்கையோடு செய்தால், கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.