ரோட்டு கடை காரச் சட்னியை இப்படியும் கூட அரைக்கலாமா? இந்த காரச் சட்னி ரெசிபி இத்தனை நாட்களாக தெரியாமல் போய் விட்டதே.

kara-chutney1
- Advertisement -

ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விதமான கார சட்னி இருக்கும். அந்த வரிசையில் இன்றைக்கு ஒரு புதுவிதமான கார சட்னியை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கார சட்னியில் பூண்டின் வாசம் கொஞ்சம் அதிகமாக இருக்கப்போகின்றது. இதில் வெங்காயம் சேர்க்க போவது கிடையாது. ரொம்ப ரொம்ப ஈஸியா ரொம்ப ரொம்ப டேஸ்டா நாவிற்க்கு ருசிதர கூடிய ஒரு கார சட்னி ரெசிபி உங்களுக்காக.

spicy-onion-chutney2

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் 10, நெல்லிக்காய் அளவு – புளி, 1 – கொத்து கறிவேப்பிலை, பூண்டு தோலுரித்து – 15 லிருந்து 20 பல், சட்னிக்கு தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதனோடு மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி பழங்களை போட்டு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேவை இருக்காது. தக்காளிப் பழத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதும். (உங்களுடைய வீட்டில் காஷ்மீரி மிளகாய் இருந்தால் அதில் 4 எடுத்து இந்த மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளலாம். கடையில் கொடுக்கும் அதே சிவப்பு நிறம் நம்ம வீட்டு சட்னியிலும் கிடைக்கும்.)

- Advertisement -

பச்சையாக தான் நாம் எல்லா பொருட்களையும் அரைத்து இருக்கின்றோம். இதை தாளித்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பில் அகலமான ஒரு கடாயை வைத்து 2 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் போட்டு, நன்றாக பொரிந்து வரட்டும்.

chutney5

அடுத்து 1 கொத்து கருவேப்பிலை, 1/4 – ஸ்பூன் பெருங்காயத்தூள், சேர்த்து உடனடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சட்னி விழுதை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு மூடி போட்டு இந்த சட்னியை நன்றாக கொதிக்க வையுங்கள். சட்னியில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் நீங்கி, நாம் ஊற்றியிருக்கும் எண்ணெய் நன்றாக பிரிந்து வர வேண்டும்.

- Advertisement -

அவ்வளவு தான். கமகம வாசத்துடன் சூப்பரான சட்னி தயார். இந்த சட்னியை சுடசுட இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் இரண்டு இட்லி அதிகமாக உள்ளே இருக்கும். இந்த சட்னியை தண்ணீர் இல்லாத ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். கட்டாயம் நல்லெண்ணெயில் இந்த சட்னியை செய்யுங்கள். காரசாரமா செய்கிற சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் தான் உடலுக்கு எந்த கெடுதலும் இருக்காது.

chutney

உங்களுக்கு இந்த சட்னி ரெசிபி பிடித்திருக்கா. சுட சுட தட்டுல நாலு இட்லி, சூப்பரான ஒரு தேங்காய் சட்னியுடன் இந்த கார சட்னியை பரிமாறி பாருங்கள். வாழ்க்கையில வேற என்னங்க வேணும்.

- Advertisement -