கல்கி அவதாரம் குறித்த ரகசிய கல்வெட்டு திருப்பதியில் உள்ளதா ?

Tirupathi Perumal
- Advertisement -

படைத்தலுக்கு பிரம்ம தேவன், காப்பதற்கு திருமால், அழித்தலுக்கு சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளில் சிவனுக்கும், திருமாலுக்கும் எண்ணற்ற கோவில்கள் நம் நாட்டில் இருக்கின்றன. அதிலும் “மகாவிஷ்ணுவை” முதன்மை கடவுளாக கொண்டு வழிபடும் “வைணவர்கள்” அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வழிபடும் ஒரு புகழ்பெற்ற புனித வழிபாட்டு தலம் தான் “திருப்பதி-திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதியின்” ஆலயமாகும். பல ஆச்சர்யங்களை தனக்குள் வைத்திருக்கும் அக்கோவிலின் ஒரு ஆச்சர்யம் அளிக்கும் விடயத்தை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

elumalayaan

இந்த திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையனின் கோவில் நமது நாட்டில் இருக்கும் மிகப்பழமையான கோவில்களில் ஒன்று. இக்கோவிலில் இருக்கும் ஏழுமலையானின் சிலை இந்த உலகத்தை சேராத, சிற்பிகளால் செதுக்கப்படாத சிலை என்றும் கூறப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டு வந்த “தொண்டைமான்” என்கிற தமிழ் மன்னனே இக்கோவிலை முதலில் கண்டுபிடித்து பின்பு சீரமைத்து கட்டியதாக சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பல்லவ, சோழ, விஜயநகர அரச வம்சத்தினரும் இக்கோவிலை காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தி கட்டினர். அப்படி மேம்படுத்தி கட்டும் போது சில தெய்வீக வாக்கியங்கள் அடங்கிய கல்வெட்டுகளையும், அக்கோவிலின் கட்டுமானத்தில் இடம்பெறும்படி செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட கல்வெட்டில், இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த கலியுகம் முடிவடையும் போது உலகிலுள்ள அனைத்து கோவில்களும் மரைந்துபோகும் என்றும் அப்போது மகாவிஷ்ணு மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து தீயவற்றை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார் என்றும், பின்பு அந்த பெருமாளே புதிய வழிபாட்டு தளங்களை உருவாக்குவார் என்றும் அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாக சிலர் கூறுகிறார்கள். இந்த தகவல் சமூக வலயத்தளங்களிலும் பரவி வருகிறது. ஆனால் அப்படி ஒரு கல்வெட்டு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது உண்மையில் ஒரு செவி வழி செய்தியாகவே இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது.

perumal

இது ஒருபுறம் இருக்க, திருமலை கோவிலில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களும், கட்டுமானங்களும் அக்கோவில் நிர்வாகத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் இப்படி ஒரு கல்வெட்டு பல காலத்திற்கு முன்பு இருந்து அது அழிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏன் என்றால் புராணத்தின் படி கலியுகத்தின் முடிவில் திருமால், “கல்கி” அவதாரம் எடுத்து அதர்மங்களை அழிப்பார் என்பது நாம் அறிந்த உண்மையே. அதே தகவலை அக்காலத்தில் கல்வெட்டாக செதுக்கி இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ராமானுஜர் சிபாரிசுக்காக நேரில் தோன்றிய திருப்பதி பெருமாள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -