கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம்

Kanavan manaivi otrumai pariharam in Tamil
- Advertisement -

இல்லற வாழ்க்கை என்பது மிகச் சிறப்பானதாக இருக்க திருமணமான கணவன் – மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை குறைந்து, வேற்றுமை அதிகரித்து, சில திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு சில தம்பதிகள் மணமுறிவு கோரி நீதிமன்றங்கள் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்கவும், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க பரிகாரம்

தற்காலத்தில் திருமணம் ஆகும் பல குடும்பங்களில் பெண்கள் சிறிய அளவு மன கசப்பு ஏற்பட்டாலும் தங்களின் கணவனை விட்டுப் பிரிந்து, தாய் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றவர்களில் பெண்கள் தங்கள் கணவருடன் மீண்டும் இணைந்து வாழவும், மன வேறுபாடுகள் இருக்கின்ற கணவருடன் ஒற்றுமை ஏற்படவும்

- Advertisement -

ஓம் க்லீம் காமதேவாய ரதிநாதாய
மோகனாய மம பதிம்
மே வசமாநாய நமஹ
ஓம் க்லீம் காமதேவாய
வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
தந்நோ அநங்க ப்ரசோதயாத்

எனும் இந்த மந்திரத்தை கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பும் பெண்கள் தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் 108 எண்ணிக்கையில் துதித்து வர வேண்டும். மேலும் தங்களின் தாலி சரடில் அம்பாளை வேண்டிக் கொண்டு குங்கும பொட்டிட்டு பின்பு, உங்கள் வீட்டு பூஜை அறையில் சிறிய அளவில இருக்கின்ற அம்பாளின் படம் அல்லது விக்கிரகத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

திருமணம் ஆன கணவன் – மனைவி ஆகிய இருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு தெய்வீக வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர். சிவபெருமானும், உமையாளும் ஒருவரை ஒருவர் நிறைவு செய்கின்ற வடிவமான ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திற்குரிய அற்புதமான இந்த

ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா

- Advertisement -

எனும் இந்த அர்த்தநாரீஸ்வர மந்திரத்தை பிரிந்து வாழும் தம்பதிகளில் ஆண் – பெண் இருவருமே மற்றவருடன் இணைந்து வாழ துதித்து வரவேண்டும். இந்த மந்திர உச்சாடனத்தின் பலனாக கூடிய விரையிலேயே தம்பதிகளிடம் நல்ல மனமாற்றம் ஏற்பட்டு, மன கசப்புகள் குறைந்து, கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லக்கூடிய மனப்பக்குவம் இருவருக்குமே அதிகரிக்கும்.

தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புகின்ற ஆண் – பெண் யாராக இருந்தாலும் திங்கட்கிழமைகள் தோறும் சோமவார விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக 21 திங்கட்கிழமை சோமவாரம் இருந்து வழிபடுவதால், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த சோமவார விரதம் மேற்கொண்டவர்கள், விரத காலத்தின் முடிவில் ஒரு வயதான தம்பதிகளின் காலில் விழுந்து அவர்களின் ஆசிர்வாதங்களை கட்டாயம் பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க பரிகாரம்

திங்கட்கிழமைகளில் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு காய்ச்சாத பசும்பாலை வழங்க வேண்டும். சிவன் கோயில்களில் நடக்கின்ற சிவபெருமான் – பார்வதி திருமண வைபவ நிகழ்வை தங்களின் சொந்த செலவில் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் போன்றவற்றை வழங்குவதாலும் பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு மிக விரைவில் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள்.

- Advertisement -