அட! இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டையே வராதா? இந்தப் படத்திற்கு அப்படி என்னதான் மகிமை?

fight

கணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள் கட்டாயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வந்து, நிரந்தரமாக பிரியம் அளவிற்கு செல்லவே மாட்டார்கள். கட்டாயம் அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எப்போதும்போல கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்து போவது என்பது இயற்கை. அந்த சண்டை பெரிதாகி கணவன் மனைவி நிரந்தரமாகப் பிரிவதற்கு கட்டாயமாக வாய்ப்பே இல்லை, இந்த தெய்வத்தை தினம்தோறும் பார்த்து வழிபாடு செய்தால்!

fight4

அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருமண தடை உள்ளது என்றால், அவர்களும் இந்த தெய்வத்தின் திரு உருவ படத்தை பூஜை அறையில் வைத்து தினம்தோறும் பார்த்து வழிபாடு செய்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சில தம்பதியருக்கெல்லாம் ஜாதகம் பார்த்து திருமணம் நடந்திருக்கும். கல்யாணமான, மூன்றிலிருந்து நான்கு மாதத்திற்குள்லேவே பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு தரும் அந்த தெய்வத்தின் திருவுருவப்படம் என்ன? எதற்காக அந்த தெய்வத்தின் திரு உருவத்தை நாம் வழிபாடு செய்தால், நமக்கு நன்மை நடக்கின்றது என்ற காரணத்தையும் தெரிந்து கொள்ளலாமா?

ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும், எம்பெருமான் பெருமாளின் திருவுருவப்படம் தான் அது. எல்லாம்வல்ல அந்தப் ‘பெருமாள் மகாலட்சுமியின்’ திருவுருவப்படம் தான் அது. பெருமாளும் மகாலட்சுமியும் சேர்ந்திருக்கும் திருவுருவப்படம் எல்லோரது வீட்டிலும் இருக்கும். ஆனால் ஸ்ரீரங்கத்தில், பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் மகாலட்சுமியின் திருவுருவப்படம் என்பது எல்லோரது வீட்டிலும் இருக்காது. ஸ்ரீரங்கத்தில் பெருமாள், ஆதிசேஷன் மீது எப்படி பள்ளி கொண்டு இருக்கின்றாரோ, அதேபோல் இருக்கின்ற பெருமாள் மகாலட்சுமியின் திருவுருவப்படம் தான் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும்.

fight

கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முழு முதற்காரணமாக இருப்பது ராகு கேது. அந்த ராகு கேதுவின் அம்சம் தான் ஆதிசேஷன். அதாவது நாகம். ஒரு பாம்பு உருவம்தானே ராகுவாகவும் கேதுவாகவும் பிரிந்து நிற்கின்றது. அந்த ஐந்து தலை நாகத்தின் மீதே பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை நாம் சென்று தரிசனம் செய்வது, ராகு கேதுவினால் நமக்கு ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு பரிகாரம்.

- Advertisement -

இதனால்தான் திருமணத்தடை உள்ளவர்கள், ஒரு முறையாவது ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் செய்து வரச் சொல்கிறார்கள். உங்களுக்கு புரிந்திருக்கும் அல்லவா? ராகு கேதுவினால் இருக்கக்கூடிய பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு விசாலமாக அமர்ந்திருக்கும் அந்த பெருமாள் மட்டுமே முடியும்.

திருமணமாகாதவர்கள், ஸ்ரீரங்கத்திற்கு சென்று அந்தப் பெருமாளை தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இல்லற வாழ்க்கையில் சதாகாலமும் பிரச்சனை இருந்து கொண்டு, அந்த ஸ்ரீரங்கம் பெருமாளை சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய வீட்டில் இந்த ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவப்படத்தை கட்டாயம் வாங்கி வையுங்கள்.

ranganathar1

அதில் மகாலட்சுமியும், பெருமாளின் காலடியில் வாசம் செய்கின்றாள். கணவன் மனைவி ஒற்றுமை என்றாலே அதற்கு எடுத்துக்காட்டு மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் தான். உங்களுடைய வீட்டில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில், இந்த திரு உருவப்படம் இருந்தால் நிச்சயம் உங்களது இல்லற வாழ்க்கை சீர்குலைவதற்கு வாய்ப்பே கிடையாது என்ற கருத்தை இந்த இடத்தில் சொல்லி, ஆணித்தனமாக அடித்துச் சொல்லி, இந்த பதிவை முடிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வியாபாரத்தில் பெருத்த நஷ்டமா? தொழில் ஏற்பட்ட நஷ்டத்தை, உடனடியாக லாபமாக மாற்ற முடியும். இந்த 1 பொருளை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.