திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.

sivan
- Advertisement -

கணவன் மனைவி என்றால் ஒரு சண்டை கூட வராது என்று யார் சொன்னது. அந்த பரமசிவன் பார்வதி ஆகவே இருந்தாலும், சண்டை போட்டுக் கொண்டுதான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். கடவுளுக்கே அந்த நிலைமை. மனிதர்களாக பிறந்த நமக்கு சண்டை வராமல் இருக்குமா. சண்டை இருந்தால்தான் அந்த வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் இருக்கும். ஒரு புரிதல் இருக்கும்.

ஆனால் அதற்காக வெறுப்பு வரும் அளவுக்கு சண்டை போடக்கூடாது. வீட்டில் இருக்கும் குழந்தைகளோ, மற்ற உறவுகளோ பாதிக்கும் அளவுக்கு சண்டை போடக்கூடாது. கணவன் மனைவிக்குள் காலை வந்த சண்டை, மாலையிலேயே நிறைவடைந்து விட வேண்டும். அந்த சண்டைக்கு ஆயுள் ஒரு நாளாக தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சரி எப்போதும் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியே இல்லை. ஒருவருக்கு ஒருவர் வெறுப்புணர்வோடு வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி பெற சிவ பெருமானை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவுதான் இது.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ, சிவன் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் திங்கள்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வில்வ இலை எடுத்துக்கோங்க. ஏழு என்ற எண்ணிக்கையில் வில்வ இலை இருக்க வேண்டும். அந்த வில்வ இலையில் சிவன் பார்வதி என்ற பெயரை எழுதி விடுங்கள். நீல நிற பேனாவில் எழுதலாம். முடிந்தால் மஞ்சளை கரைத்து அதில் எழுதுங்கள்.

- Advertisement -

ஏழு வில்வ இலையில் மட்டும் தான் சிவன் பார்வதி என்ற பெயர் இருக்க வேண்டும். இந்த வில்வ இலைகளை அப்படியே உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு கொண்டு போய் எம்பெருமானுககு சமர்ப்பணம் செய்ய வேண்டும். சிவபெருமானின் பாதங்களில் இந்த இலைகள் போய் சேர வேண்டும்.

கணவன் மனைவியும் ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் பெயர், உங்கள் வாழ்க்கை துணையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த சிவன் கோவிலை ஏழு முறை வளம் வந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கணவன் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவி மட்டுமும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரண்டு பேரும் சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய அன்யூன்யம் இன்னும் மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவி, மனைவியை விட்டு பிரிந்து வாழும் கணவன் இவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

அப்படி நீங்கள் பிரிந்து வாழ்ந்திருந்தால் உங்கள்வாழ்க்கைத் துணை உபயோகப்படுத்திய துணியை, உங்கள் கையில் எடுத்துக் கொண்டு, சிவன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாடு செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதாவது நீங்கள் மனைவியாக இருந்தால், உங்கள் கணவர் பயன்படுத்திய துணி உங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்கள் கணவராக இருந்தால் உங்கள் மனைவி உடுத்திய துணி உங்கள் கையில் இருக்க வேண்டும்.

அப்படி துணி இல்லை என்றால் அவர்களுடைய புகைப்படத்தை யாவது கையில் எடுத்துக்கொண்டு இந்த சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளவும். புகைப்படமும் கையில் இல்லை என்றால் தொலைபேசியில் எடுத்த போட்டோ இருக்கும் அல்லவா அதையாவது கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை ஏழு திங்கட்கிழமை செய்து வரும் பட்சத்தில் நிச்சயம் கணவன் மனைவி பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -