அடிக்கடி வீட்டில் இந்த குழம்பு வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவே வராது. கணவன் மனைவிக்குள் இறுதி வரை ஒற்றுமை இருக்கும்.

fight
- Advertisement -

எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாமல், வெறும் தாலி கொடியின் மூலம் மட்டும் நமக்கு சொந்தமாக கூடிய உறவு தான் திருமண பந்தம். திருமணம் என்ற இந்த பந்தத்திற்குள் ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து கணவன் மனைவியாக மாறிவிட்டால் அவர்களை இறப்பு மட்டும் தான் பிரிக்க வேண்டும். சில கணவன் மனைவி, இறப்பில் கூட ஒன்றாக இருக்க வேண்டும் நினைப்பவர்கள். நிஜத்திலேயே இப்படி தம்பதியர்கள் ஆக உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறையாக சொல்லுவதாக நினைக்க வேண்டாம். கணவன் மனைவி பந்தம் என்பது நிச்சயம் அப்படித்தான் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, பூகம்பமே வீட்டில் வெடித்தாலும் சரி உறவை பிரித்துக் கொண்டு செல்லக்கூடாது.

கணவன் மனைவியும் எப்படி சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக புராணங்களில் நிறைய கதைகள் உண்டு. அப்படிப்பட்ட கதைகளையும், அப்படி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த தெய்வங்களின் திருவுருவப்படத்தையும் உங்கள் கண்முன்னே வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லற வாழ்க்கைக்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயம் தான். எல்லாவற்றிற்கும் மனசு தான் காரணம். மனதிற்குள் நாம் எதை திரும்பத் திரும்ப நினைத்து எதை திரும்ப திரும்ப பார்க்கின்றோமோ அதுதான் நம்முடைய வாழ்விலும் நடக்கும்.

- Advertisement -

உங்களுடைய அக்கம் பக்கம் வீட்டினில் யாராவது புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அவர்களை நீங்க திரும்பி கூட பாக்காதீங்க. அவர்களை பார்க்கும்போது நமக்கும் அதே போல சண்டை போட வேண்டும் என்று எண்ணம் வந்துவிடும். இந்த பக்கம் வீட்டில் கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தால், அவர்களை தினம் தினம் பாருங்கள். அவர்கள் எப்படி குடும்பம் நடத்துகிறார்கள். கணவன், மனைவியின் மீது எப்படி எல்லாம் அன்பு செலுத்துகிறார். மனைவி கணவனின் மீது எப்படி எல்லாம் அக்கறை காட்டுகிறாள் என்பதை பார்த்து பார்த்து வாழும்போது நமக்கும் அப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். சரி இதெல்லாம் போகட்டும் இப்படி கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வதற்கு ஆன்மீகம் சார்ந்த ஏதாவது பரிகாரம் உண்டா. இருக்குது, அதை தான் இப்போது பார்க்கப் போகின்றோம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்:
செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கை சரியான முறையில் அமைந்து விட்டால், அந்த குடும்பத்தில் கணவன் மனைவிக்கு பிரச்சனையே வராது. செவ்வாய்க்கிழமை, சுக்கிரனுக்கு உரிய மொச்சையை சமைக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அவரைக்காய் சேர்த்து குழம்பு வைக்க வேண்டும். அவரைக்காய் பொரியல் செய்ய வேண்டும். அவரை கொட்டையில் இருந்தால் மொச்சை கிடைக்கிறது. அதனால் அவரை காயையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று இந்த அவரை, மொச்சை, துவரம் பருப்பு, இந்த பொருட்களை வாங்கி யாருக்காவது ஒரு ஏழை குடும்பத்திற்கு தானமாக கொடுத்து அதை அவர்கள், சமைத்து சாப்பிட்டார்கள் என்றால் உங்கள் குடும்பத்திற்கு செவ்வாயின், சுக்கிரனின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது குறையும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் பலன் அளிக்க வில்லையா? அதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம். முதலில் இதை செய்த பிறகு பரிகாரத்தை செய்யுங்கள் விரைவில் கடன் அடைந்து விடும்.

பிரிந்த கணவன் மனைவியாக இருந்தால், மனைவி கையால் சமைத்து கணவருக்கு அவரை மொச்சையை கொடுக்க முடியாது. ஆனால் இந்த பொருட்களை வாங்கி, இன்னொரு குடும்பத்திற்கு தானமாக கொடுக்க வேண்டும். அந்த குடும்பத்தில் நீங்கள் தானமாக கொடுத்த மொச்சை அவரையே சமைத்து, தானமாக பெற்ற பெண் தன்னுடைய கணவனுக்கு சமைத்துக் கொடுத்தால், அந்த புண்ணியம் உங்களை வந்து சேரும். பிரிந்த நீங்கள் திரும்பவும் ஒன்று சேருவீர்கள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். ஒரு சில வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -