சண்டைக் கோழி போல் இருக்கும் கணவன் மனைவி கூட சமாதான புறாக்கள் போல ஒற்றுமையாக வாழ, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை எரித்தால் போதும்.

husband wife
- Advertisement -

இல்லறம் என்பது எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதலும், அன்னோனியமும் இருக்க வேண்டும். அப்படியான குடும்பங்களில் மட்டும் தான் எந்த துன்பங்கள் வந்தாலும் அதையும் தாண்டி நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த முடியும்.

இன்று பல குடும்பங்களில் எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாகவே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு குடும்பத்தில் எந்நேரமும் கணவனும், மனைவியும் சண்டை போட்டு கொண்டே இருந்தால், அந்த வாழ்க்கை இருவருக்குமே சலித்து விடும். எதற்காக இப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடும். இவர்களுக்கே இப்படி தோன்றினால் அந்த குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளின் நிலையை பற்றி யோசித்துப் பாருங்கள்.

கணவன், மனைவி இருவருமே ஒருவர் ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்வது தான் நல்லதொரு வாழ்க்கையாக இருக்கும். சில நேரங்களில் இப்படி அவர்கள் வாழ நினைத்தாலும் கூட, வாழ முடியாமல் சில எண்ணங்கள் அவர்களை தடுத்துக் கொண்டே இருக்கும். நாம் ஏன் பேச வேண்டும், நாம் எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தோன்றி கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதிர்மறை எண்ணங்களை தோன்றிக் கொண்டிருக்கும். இதற்கு காரணம் ஏதுவாகவும் இருக்கலாம். வீட்டின் கெட்ட சக்தி,திருஷ்டி, கிரக கோளாறு இப்படி எந்த காரணத்தினால் இந்த மனநிலை இருந்தாலும், இந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுது வீட்டில் இருப்பவர்களின் மனநிலை மாறி அமைதியான முறையில் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது அது என்னவென்று பார்க்கலாம்.

கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க:
இந்த பரிகாரத்தை செவ்வாய், சனி இந்த இரண்டு தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். இதை மற்ற நாட்களில் செய்யக் கூடாது. இதை செய்வதற்கு நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் மூன்று பொருட்கள் தேவை ஒன்று காய்ந்த மிளகாய், உரிக்காத பூண்டு, கடுகு.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை மாலை வேலையில் மாலை 7 மணிக்கு மேல் இந்த மூன்று பொருட்களிலும் கொஞ்சமாக இடது கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் நின்று கொண்டு முதலில் மேலிருந்து கீழ் என மூன்று முறையும், கீழிருந்து மேலாக மூன்று முறையும் அதே போல் இடம் இருந்து வலம் மூன்று முறையும், வலமிருந்து இடம் மூன்று முறையும் சுற்றிய பிறகு வெளியே சென்று எரித்து விட வேண்டும். இப்படி கையில் வைத்து சுற்றி போட முடியவில்லை என்றால் தூப காலில் நெருப்பூட்டி அதில் இந்தப் பொருட்களை எல்லாம் சேர்த்து இது போல சுற்றிய பிறகு இதை அப்படியே வெளியே கொண்டு வைத்து விடுங்கள்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை சுற்றி சுற்றி போட சொல்லாம். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சுற்றிக் கொள்ளலாம். இதை குடும்பமாக அமர்ந்தும் சுற்றி போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல், திருஷ்டி, நமக்கு யாரேனும் கெட்டது செய்து இருந்தாலும் அனைத்தும் நீங்கி வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல்கள் உருவாகத் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதை மூன்று மாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் வாரம் செவ்வாய்க் கிழமையில் சுற்றி போடத் தொடங்கினால் மூன்று வாரம் வரையில் அப்படியே செய்யுங்கள். சனிக்கிழமையில் ஆரம்பித்தால் அதே போல் சனிக்கிழமையிலும் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: முன்னோர்கள் சம்பாதிக்க முடியாத செல்வத்தை நீங்கள் சம்பாதிக்க 48 நாட்கள் இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வந்தால் போதும்.

சுற்றி போடுவது என்பது இன்று நேற்று தொடங்கிய பழக்கமில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொடங்கியது தான். அப்போதே அவர்கள் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்க பயன்படுத்திய இந்த முறை தான் இதில் சில பொருட்களை சேர்த்து செய்யும் பொழுது இருவருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்பு அதிகரித்து குடும்பம் சந்தோசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.

- Advertisement -