டேஸ்டியான காரச் சட்னி 2 நிமிடத்தில் இப்படி வச்சு பாருங்க, உங்க வீட்டில் அடிக்கடி இனி இது தான் செய்வீங்க!

kara-chutney0
- Advertisement -

ரொம்பவே சுவையான, காரசாரமான சட்னியை இவ்வளவு சுலபமாக செய்ய முடியுமா? என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அவசர நேரத்தில் தேங்காய் சட்னியை வைத்துவிட்டு பிடிக்காமல் சாப்பிடுவதை விட, இப்படி காரசாரமா சட்டுனு இரண்டே நிமிடத்தில் காரச் சட்னி செஞ்சு சாப்பிட்டா செமையாக இருக்கும். சுவை மிகுந்த காரச் சட்னி நாமும் வீட்டில் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

tomato-grow3

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 2, புளி – சிறு கோலிகுண்டு அளவு, பூண்டு பல் – 2, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வர மிளகாய் – 5, காஷ்மீரி மிளகாய் – 2, கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

கார சட்னி செய்முறை விளக்கம்:
காரசாரமான இந்த சுவை மிகுந்த கார சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் நன்கு கழுவி சுத்தம் செய்த இரண்டு பெரிய தக்காளி பழங்களை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு தன்மைக்கு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் காரத்திற்கு வர மிளகாய் 5, காஷ்மீரி மிளகாய் 2 என்கிற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

tomato-chutney1

காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் கூடுதலாக ஒரு மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் நல்ல நிறத்தை கொடுக்கும். பின்னர் இவற்றுடன் தோல் உரித்த பெரிய பல் பூண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதற்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் எல்லா சட்னி வகைகளுக்கும் தூள் உப்பு சேர்ப்பதை விட, கல் உப்பு சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

- Advertisement -

மிக்ஸியை இப்போது இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதிற்கு இப்போது சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். தாளிக்க அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். காரம் அதிகம் சேர்த்து செய்யும் கார சட்னி வகைகளுக்கு எப்பொழுதும் நல்லெண்ணெய் ஊற்றுவது தான் சுவையாக இருக்கும்.

road-side-tomato-chutney1

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கடுகு போட்டு பொரிய விடுங்கள் கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்து விடுங்கள். பிறகு காரச் சட்னியுடன் சூடாக அப்படியே கொட்டி நன்கு கலந்து சுடச்சுட இட்லி, தோசை, வடை, பஜ்ஜி, போண்டா, ஆப்பம், உப்புமா போன்றவற்றுக்கு கூட தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். பச்சையாக நாம் எல்லா பொருட்களையும் அரைப்பதால் சூடாக நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொழுது அந்த பச்சை வாசத்தை எடுத்துவிடும், அவ்வளவுதாங்க இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -