செய்ய நினைக்கும் காரியம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதே என்ற வருத்தம் இனிமேல் இருக்காது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியங்கள் எளிதில் நடக்கும்.

VINAYAGAR
- Advertisement -

நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த நாளை தொடங்குவோம். அவ்வாறு செய்ய வேண்டிய காரியம் எந்தவித தடையும் இன்றி நடைபெற சில பரிகாரங்கள் இருக்கின்றன. நாம் செய்ய நினைக்கும் காரியங்களில், எந்த காரியம் யாரையும் துன்புறுத்தாமல், நியாயமான கோரிக்கையாக இருக்கிறதோ, அந்த காரியம் எளிதில் நடைபெறவே இந்த பரிகாரம் உபயோகப்படும். அடுத்தவர்களை கஷ்டப்படுத்த செய்யும் காரியங்களுக்கு இது பொருந்தாது. நியாயமான செயல்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அப்படிப்பட்ட பரிகாரம், அதுவும் மிகவும் எளிமையான பரிகாரம் என்னவென்று இப்போது பார்ப்போம்.

அதுதான் பிரதட்சணம் செய்வது. பல பேருக்கு இது என்னவென்று தெரியும். சிலருக்கு இது தெரியாது என்பதால் பிரதட்சணம் என்பது வலம் இருந்து இடமாக சுற்றி வருவது. நாம் பொதுவாக கோவிலை சுற்றி வருவோம் அல்லவா? அதுதான். யாரை சுற்றிவர வேண்டும்? எங்கு சுற்றிவர வேண்டும்? எப்படி சுற்ற வேண்டும்? எத்தனை முறை சுற்றிவர வேண்டும்? என்பதை இப்போது காண்போம்.

- Advertisement -

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் பொதுவாக அனைவரும் விநாயகர் பெருமானை வணங்குவது மரபு. அதே போல் தான் நாம் ஒரு காரியத்தை, அதுவும் நியாயமான காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பு, நம் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று வலம் இருந்து இடமாக 11 முறை சுற்றி வர வேண்டும். அவ்வாறு சுற்றி வந்தால் நாம் செய்ய தொடங்கும் காரியம் வெற்றி அடையும்.

ஒவ்வொருவருக்கும் தனக்கு பிடித்தமான இஷ்ட தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அது நமக்கு குலதெய்வமாகவும் இருக்கலாம். வீட்டின் அருகில் விநாயகர் கோவில் இல்லை என்றால் நமக்கு பிடித்த ஏதாவது ஒரு இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று 11 முறை சுற்றி வரலாம். வீட்டின் அருகில் விநாயகர் கோவிலும் இல்லை இஷ்ட தெய்வம் கோவிலும் இல்லை என்று சொல்பவர்களும் உள்ளனர்.

- Advertisement -

அவ்வாறு இருப்பவர்கள் தங்கள் பூஜை அறையிலேயே சுற்றலாம். அதில் எந்த தவறும் இல்லை. சுற்றி வரும் பொழுது நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் நினைத்து, செய்ய நினைக்கும் காரியத்தை எந்த தடைகளும் இன்றி செய்ய வழி காட்ட வேண்டும் என்று நினைத்தபடி சுற்றலாம்.

பூஜை அறையில் சுற்ற வசதியற்றவர்கள், அதாவது சுவாமி படம் அலமாரியில் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் புகைப்படத்தை ஒரு நாற்காலியின் மீது வைத்து அவர்களை மனதார நினைத்து 11 முறை வலம் இருந்து இடமாக சுற்றி வந்து நாம் நினைத்த காரியத்தை செய்தால், அந்த காரியம் வெற்றி அடையும். எந்தவித தடைகளும் இன்றி நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: ஐந்து புதன்கிழமைகள் இந்த விளக்கை ஏற்றினால், அடுத்த ஐந்து தலைமுறைக்கு உங்கள் குடும்பத்தில் கடன் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

தன்னைத் தானே சுற்றியும் பிரதட்சணம் செய்யலாம். அதுவும் தவறு இல்லை. நாம் காலையில் பூஜை அறையில் இந்த சிறிய காரியத்தை செய்து நம்முடைய நாளை தொடங்கி, நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை எந்தவித தடைகளும் இன்றி வெற்றிகரமாக செய்து முடிக்க கடவுளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -