மசாலா சேர்த்து அரைக்கும் இந்த கருவேப்பிலை குழம்பை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இந்த குழம்பு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்

karuveppilai
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறிகளை சேர்த்து குழம்பு வைத்து கொடுக்கிறோம். என்றாவது ஒருநாள் என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிக்கும் பொழுது வீட்டில் காய்கறிகள் இல்லாமல் இருந்தாலும் இந்த குழம்பை சட்டென செய்துவிடலாம். கருவேப்பிலையை எப்பொழுதும் தாளிப்பதற்காக தான் பயன்படுத்துகிறோம். என்றாவது ஒருநாள் மட்டுமே கருவேப்பிலை சாதம், கருவேப்பிலை துவையல் செய்கிறோம். ஆனால் ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்து பாருங்கள். நாக்கில் நீர் சொட்ட சொட்ட சாப்பாடு தொண்டையில் இறங்கும் அளவிற்கு அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். இந்த குழம்பு உடல் நலத்திற்கும் மிகவும் நன்மை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. பிரசவம் முடிந்த பிறகு பெண்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுக்க அவர்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுகிறது. வாருங்கள் இந்த சுவையான கருவேப்பிலை காரக்குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – 1 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கருவேப்பிலையை உருவி சுத்தமாக தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அதில் லேசாக எண்ணெய் விட்டு சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு இவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் காய்ந்த மிளகாயையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இறுதியாக நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். இவற்றையும் கருவேப்பிலை சேர்த்துள்ள தட்டிற்கு மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, பின்னர் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் மீதம் இருக்கும் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்தால் போதும். சுவையான கருவேப்பிலை குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -