செவ்வாய்க்கிழமை மாலை குலதெய்வத்தை நினைத்து, நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வேண்டுதல் வைத்தால் தீராத கஷ்டங்களும் தீரும். வேண்டுதல் உடனே பலிக்கும்.

deepam3

எதிர்பாராமல் ஏற்படுகின்ற சில கசப்பான சம்பவங்கள், சில சமயங்களில் நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தீராத கஷ்டங்கள் வரும்போது அந்தக் கஷ்டங்களை இறைவனின் பாதங்களில் இறக்கி வைப்பதுதான் ஒரே வழி. எதிர்பாராத சமயத்தில், எதிர்பாராத கஷ்டத்தில் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ சிக்கி இருந்தால், குலதெய்வத்தை நினைத்து செவ்வாய்க்கிழமை தினமான இன்று மாலை, இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி வைத்து, மனமுருகி வேண்டுதல் வைத்தால் உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும். உங்களுடைய மன கஷ்டம் அனைத்தும் காணாமல் போகும்.

praying-god1

உங்கள் வீட்டில் இருக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள் துயரங்கள் இவை அனைத்தும் காணாமல் போக இதோ சுலபமான உங்களுக்கான ஒரு தீர்வு. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். காலையில் நீங்கள் சுத்தமாக குளித்து இருந்தாலும் கூட மாலை ஒருமுறை குளித்துவிட்டு இந்த பூஜையை செய்வது நன்மையை தரும்.

வீட்டுப் பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். ஒரு சிறிய தாம்பூலத் தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமத்தைக் கொட்டி பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குங்குமத்தில் உங்களது வலது கை ஆள்காட்டி விரலால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து விடுங்கள்.

kungumam

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரையும் போது நான்கு திசைகளில் இருந்தும் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விட வேண்டுமென்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தாம்பூலத் தட்டில் குங்குமத்தைக் கொட்டி ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து தயாராக இருக்கும் அந்த தட்டின் மேல், ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். இந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தை மனமுருக, உங்கள் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியம்.

- Advertisement -

தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து பூஜையறையில் தீப தூப ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு பூஜை அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது. நீங்கள் தீபம் ஏற்றி வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த தீபத்திற்கு முன்பாக பூஜை அறையிலேயே அமருங்கள்.

vilakku-pray

அமர்ந்து அந்த தீபத்தை நோக்கி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை சொல்லி, மனதார குல தெய்வத்தை வழிபட வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த அகல்விளக்கிற்க்கு அடியில் இருக்கும் குங்குமத்தை, வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இந்தப் பூஜையை ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை செய்துவிட்டு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் அன்றைக்கே தீரவேண்டும் என்று நினைப்பது தவறான ஒரு விஷயம்.

வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வரும் பட்சத்தில் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், ஆரோக்கியத்தில் பிரச்சனை, குழந்தைப்பேறு இல்லை, உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவில்லை, இப்படி எந்தக் கஷ்டமாக இருந்தாலும் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயமாக அந்த இறைவன் உங்களுடைய கஷ்டங்களுக்கு செவி சாய்ப்பான் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.