கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா? இந்த ஒரு தவறை தெரியாமல் கூடச் செய்து விடாதீர்கள்!

astro-cash1
- Advertisement -

நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது செய்தும் கெட்டது நடக்கிறது என்றால் அது பூர்வ புண்ணிய கர்மாவின் பயனாக உங்களுக்கு விளைவது ஆகும்.

செய்த தர்மத்திற்கு உரிய பலன்களை அப்போதே அல்லது கொஞ்ச காலம் கழித்து அனுபவிக்கும் பொழுது அது நிகழ்காலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான கர்ம வினைப்பயன் ஆகும். இப்படி இருவேறு விதமாக நீங்கள் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையில் கையில் காசு நிறைய புழங்குவதற்கு இந்த ஒரு தவறை மட்டும் செய்யாமல் இருங்கள். அது என்ன தவறு? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

- Advertisement -

ஒரு விஷயம் உங்களுக்கு நடக்கிறது என்றால் அது உங்களால் மட்டுமே நடக்கிறது என்பதை நம்ப வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற வாக்கியத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்றுமே காசு, பணம் புழங்குவதில் குறைவிருக்காது. உங்களுக்கு ஒரு நல்லது நடந்தால் அது உங்களால் என்றும், கெட்டது நடந்தால் அடுத்தவர்களால் என்றும் கூறுவது மிகப் பெரிய தவறு ஆகும். இது போல் செய்பவர்கள் கையில் காசு என்பது நிச்சயம் போதாது. பணத்தட்டுப்பாடு, பணப்பற்றாக்குறை தொடர்ந்து இவர்கள் பண ரீதியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். செயல் உங்களுடையதாக இருந்தால், அதன் விளைவுகளும் உங்களுடையது தான். வீண் பழியை மற்றவர்கள் மீது போடுபவர்கள் கையில் காசு, பணம் புழங்காது என்கிறது ஆன்மீகம். நீங்கள் கெட்டது செய்தால் உங்களுக்கு கெட்டதும், நல்லது செய்தால் நல்லதும் தான் நிச்சயம் விளையும், ஆனால் கெட்டது செய்து நல்லதும், நல்லது செய்து கெட்டதும் விளைகிறது என்றால், அது பூர்வ புண்ணிய பலன்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும்.

- Advertisement -

இது தொடர்ந்து நீடிக்காத ஒரு நிலை என்பதை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலைமை நிச்சயம் மாறும். அப்போது பூர்வ புண்ணிய கர்ம வினைப் பயன்களை அனுபவித்து முடித்து இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். நீங்கள் இதனால் இப்போது செய்யும் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். நல்லது செய்தால் என்ன நல்லதா நடந்து விடப் போகிறது? என்று மனதால் ஒரு முறை கூட நீங்கள் நினைத்து விடக் கூடாது. இப்படி நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் கையில் இருக்கும் பணப்புழக்கமும் உங்களை விட்டு சென்றுவிடும்.

நல்ல சிந்தனைகளும், நல்ல கர்மவினையும் உள்ளவர்களுக்கு கையில் காசு பணத்திற்கு ஒன்றும் குறைவே இருக்காது. அது மட்டுமல்லாமல் நான் என்ற அகம்பாவம் நீங்கி நாம் என்ற பரந்த மனப்பான்மை உடையவர்களிடமும் பணம் அதிகரிக்கும். இதனால் தான் தான, தர்மங்கள் செய்பவர்களுக்கு தொடர்ந்து பணப் புழக்கம் அதிகரிக்கிறது. தானம் செய்தால் இது நடக்கும், தர்மம் செய்தால் அது நடக்கும் என்று எதிர்பார்ப்புகளோடு செய்யும் தானத்திற்கு எந்த விதமான பலனும் இல்லை எனவே எதிர்பார்ப்புகளை குறைத்து முழுமனதாக ஒரு விஷயத்தை ஏற்கும் பொழுது அது நல்லபடியாகவே முடியும்.

- Advertisement -