கத்தரிக்காய் பொரியல்னா அது இப்படிதாங்க செய்யணும். பார்க்கும்போதே சாப்பிட ஆசையை தூண்டும் ‘கத்தரிக்காய் பொரியல்’ எப்படி செய்வது?

brinjal
- Advertisement -

இப்ப நாம செய்யப்போற இந்த டிஷ் கத்தரிக்காய் பொரியல் என்றும் சொல்லலாம். கத்தரிக்காய் வதக்கல் என்றும் சொல்லலாம். 1/2 கிலோ கத்தரிக்காய் எடுத்துக்கொண்டால் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் சரியான அளவாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு ஏற்ப கத்திரிக்காயை கூட்டவோ குறைக்கவோ செய்தால், அதற்கேற்றால் போல் இதனுடன் சேர்க்கும் பொருட்களையும் கூட குறைத்துக் கொள்ளுங்கள். சரி, நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

brinjal1

முதலில் கத்தரிக்காய் பொரியலுக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். 1/2 கிலோ கத்தரிக்காய்களை நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மொத்தமாக வெட்டிக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக மீடியம் சைஸ் வெங்காயம் – 2 நீளவாக்கில் வெட்டியது, பெரிய தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது, தோல் உரித்த பூண்டு பல் – 10 லிருந்து 15, கருவேப்பிலை – 1 கொத்து, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் அளவு, கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன்.

- Advertisement -

இந்த கத்தரிக்காய் பொரியலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் ருசியாக இருக்கும். அதே சமயம் கட்டாயமாக சோம்பு தாளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (எண்ணெய் கொஞ்சம் தாராளமாக ஒற்றிக் கொள்ளுங்கள்).

brinjal2.

கத்தரிக்காய் பொரியல் செய்ய தொடங்கி விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயை காய்ந்ததும், கடுகு, சோம்பு, பூண்டு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து தாளித்து விட்டு, அதன் பின்பு கடலைப்பருப்பை போட்டு தாளிக்க வேண்டும். கடலை பருப்பு பாதி சிவந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடங்கள், அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி பழங்களை சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் வதக்குங்கள். தக்காளியின் பச்சை வாடை நீக்கியதும், தயாராக எடுத்து வைத்திருக்கும் மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், தனி மிளகாய்த்தூள், தனியாத்தூள், சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு, நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பை தூவி இந்த கத்தரிக்காயை, கடாயில் இருக்கும் எண்ணெயோடு மசாலா பொருட்களோடு சேர்த்து கட்டாயம் அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

brinjal3.

கத்தரிக்காய் கடாயில் இருக்கும் எண்ணெயில் வதங்கினால் தான் ருசி சூப்பராக இருக்கும். சரி, கத்தரிக்காய் மசாலா பொருட்களுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு இறுதியாக 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் கத்தரிக்காய்களை வேகவைத்து விடுங்கள்.

brinjal4.

3 நிமிடங்கள் மட்டும் தான் கத்திரிக்காயை மூடி வேக வைக்க வேண்டும். அதன் பின்பு கத்தரிக்காயை மூடி போட்டு வேக வைத்தால் கத்திரிக்காய் குழைந்துவிடும். மூடி போடாமல் பொரியலை நன்றாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும். கடாயில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் முழுவதும் சுண்டி, அதிலிருக்கும் எண்ணெய் தனியாக பிரிந்து வரும். அவ்வளவு தான் சுடச்சுட கத்தரிக்காய் பொரியல் தயார்.

brinjal5

இதை ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சொல்ல வார்த்தை இல்லை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் இந்த கத்திரிக்காய் வதக்கலை மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -