காசை மிச்சம் பிடிக்க, செய்யவேண்டிய ரொம்ப ரொம்ப முக்கியமான வேலைகளில் இதுவும் ஒன்று! இந்தப் பொருட்களையெல்லாம் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வைத்துக் கொள்வது எப்படி?

tip3
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால், சமையலுக்கு வாங்கும் பொருட்களை பூச்சி பிடிக்காமல், அழுகாமல் பாதுகாக்க வேண்டும். நிறைய பொருட்களை வாங்கி வைத்து, சரியாக ஸ்டோர் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால், நாம் வாங்கும் பொருட்களில் பாதி பயன்படுத்தாமலேயே குப்பைத் தொட்டிக்கு போய்விடுகிறது. அந்த வரிசையில் சில பயனுள்ள சமையல் குறிப்புகளைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்க சிக்கனமாக இருக்கும் பெண்மணியா? அப்படின்னா நீங்க கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். எல்லா பொருட்களையும் வீணாக்கி குப்பையில் கொட்டும் பெண்மணிகளுக்கு குறிப்பு தேவைப்படாது.

ravai

Tip No 1:
நம்முடைய சமையலறையில் சீக்கிரமே பூச்சி பிடிக்கும் பொருள் என்றால் அந்த வரிசையில் ரவை, பாசிப்பருப்பு, பச்சைப்பயிறு இவைகளும் அடங்கும். இதில் சீக்கிரமே பூச்சி வந்துவிடும். என்ன செய்வது? ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக சூடானதும் ரவையை கொட்டி 5 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்க வேண்டும். ட்ரை ஃப்ரை தான் பண்ண வேண்டும். எண்ணெய் ஊற்றி வறுக்கக் கூடாது.

- Advertisement -

இப்போது வறுத்த ரவையை காய்ந்த தட்டில் கொட்டி நன்றாக ஆறவைத்து வைத்து, ஒரு டப்பாவில் கொட்டி ஸ்டோர் பண்ணி வைத்தால், நீண்ட நாட்களுக்கு ரவையில் பூச்சி வராது. பாக்கெட்டில் ஸ்டோர் செய்து கிடைக்கும் நாகா, அணில், எலைட், போன்ற பிராண்டட் ரவைகளையும் தாராளமாக வருத்தத்தே ஸ்டோர் செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. இதேபோல் தான் பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, போன்ற பயறு வகைகளையும் வறுத்து ஆற வைத்து ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

potato-urulai

Tip No 2:
நம்முடைய வீட்டில் வாங்கி வைக்கும் உருளைக்கிழங்கில் சீக்கிரமே முளை வந்துவிடும். அந்த உருளைக்கிழங்குகள் சீக்கிரம் முளைவிட்டு வீணாகாமல் இருக்க, உருளைக் கிழங்கையும், ஆப்பிளையும் ஒன்றாக ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு உருளைக்கிழங்கு நீண்ட நாட்களுக்கு முளை வராமல் இருக்கும்.

- Advertisement -

Tip No 3:
நம்முடைய வீட்டில் இப்போதெல்லாம் காலனை அதிகமாக சமையலில் சேர்த்துக் கொள்கிறோம். இந்த காளானை வாங்கிவந்த பிளாஸ்டிக் கவரோடு நம் வீட்டுச் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் கப்பில் இருக்கும் காளானை, கவரிலிருந்து தனியாக எடுத்து, சுத்தமான பேப்பர் கவரில் போட்டு, காற்று உள்ளே போகாமல் சுற்றி வைத்தால், காலால் 3 லிருந்து 4 நாட்கள் வரை கருத்துப் போகாமல்,  பிரிட்ஜில் இருக்கும். (மருந்து வாங்கும் போது பிரவுன் கலர் பேப்பர் கவர் மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும் அல்லவா? அதில் கூட காளானை ஸ்டோர் செய்து வைக்கலாம்.)

mushroom

Tip No 4:
உங்கள் வீட்டில் வடை, பூரி செய்த மீதமான எண்ணெயை மீண்டும் எப்படி பயன்படுத்துகிறீர்கள்? சிலபேர் இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதால் எடுத்து கீழே கொட்டி விடுகிறார்கள். ஆனால், இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். தாளிக்க, தோசை சுட, சப்பாத்தி செய்ய, இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக சூடான எண்ணெயை மீண்டும் மீண்டும் அதிகப்படியான டெம்பரேச்சரில் வைத்து தான் சூடு செய்யக்கூடாது. தவிர மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ice-cube

Tip No 5:
உங்கள் வீட்டில் எலுமிச்சம்பழத்தை நிறைய வாங்கி வந்து விட்டார்கள். பிரிட்ஜில் வைத்தாலும் வீணாகத்தான் செய்யும். என்ன செய்வது? எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து வடிகட்டி ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டியாக மாற்றிவிடுங்கள். ஐஸ் கட்டியை ட்ரேவிலிருந்து எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, மூடி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடலாம். தேவைப்படும்போது தேவைக்கேற்ப ஐஸ்க்யூபை வெளியே எடுத்து வைத்து  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

water-can

Tip No 6:
உங்களுக்காக இறுதியாக ஒரு சூப்பர் டிப்ஸ். நம்முடைய வீட்டில் இருக்கும் சிறிய கண்ணாடி பாட்டிலில் ஒரு பொருட்களை கொட்டி ஸ்டோர் செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கும். வெளியில் எல்லாம் சிந்தும். வெளியில் சிந்தும் பொருட்களும் வீணாகும் கணக்கில் தானே போகிறது.

bottle

உங்கள் வீட்டில் இருக்கும் வாட்டர் கேனின் வாய்ப்பகுதியை மட்டும் வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாய் பகுதியை கண்ணாடி பாட்டில்களில் வாயில் போட்டு, அதன்பின்பு பொருட்களை கொட்டினால் ஒரு பொருள் கூட வெளியே சிந்தாமல் பாட்டிலுக்குள் சுலபமாக போய்விடும். ஃபொனல் யூஸ் பண்ணிக்கலாம் என்று சிலர் கேள்வி கேட்கலாம். ஆனால், ஃபொனலின் வாய்ப்பகுதி ரொம்ப சிறியதாக இருக்கும். வாட்டர் கேன் இல் வாய்ப்பகுதி கொஞ்சம் பெரியதாக இருக்கும் அல்லவா? சுலபமாக பொருட்கள் பாட்டிலுக்குள் செல்ல!

இதையும் படிக்கலாமே
மீதமான வறண்ட சப்பாத்தியில், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்ய முடியுமா? அடடே! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -