கோவில் வாசல் படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை

temple
- Advertisement -

கோவிலுக்குள் நுழையும் போது, பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியை தொட்டு நெற்றியில் ஒற்றி கொள்வார்கள். இந்த வேலையை நாம் எதற்காக செய்கின்றோம். என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா. அந்த காலத்தில் இருந்தே முன்னோர்களும் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள். இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் ரீதியான உன்மை இருக்கிறது.

அது என்ன என்று தெரிந்து கொண்டு இனிமே இந்த செயலை நாம் செய்வோம். ஒரு செயலை அர்த்தம் தெரியாமல் பின்பற்றுவதற்கும், அர்த்தம் தெரிந்து பின்பற்றுவதற்கும், நிறையவே வித்தியாசம் இருக்கும். சரி கோவில் வாசல் படியை குனிந்து தொட்டுக் கும்பிடுவதற்கு காரணம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கோவில் படியை தொட்டு கும்பிடுவதன் காரணம்

முதலில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்குமே பணிவு இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் தலகணம் இல்லாத, பணிவு வந்துவிட்டால் அவன் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விடுவான். இதுதான் முதல் விஷயம். இந்த பணிவை நம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும்.

குனிந்து நிமிரும்போது ஒரு மனிதனுக்கு சூரிய நாடி இயங்குவதாக சொல்லப்பட்டுள்ளது.‌ படிக்கட்டை விரல்களால் தொடுவோம். தொட்ட விரல்களை நெற்றியில் ஒத்திக் கொள்வோம். இப்படி குனிந்து விரல்களை அந்த நிலை வாசல் படியில் வைத்துவிட்டு, சரியாக இரண்டு புருவத்திற்கு மத்தியில் நம்முடைய விரல்களை லேசாக அழுத்தம் கொடுத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி புருவத்தின் நடு பகுதியை நாம் அழுத்தம் கொடுத்து எடுப்பதன் மூலம், ஆக்ஞா சக்கரம் செயல் பட்டு நம் உடம்பில் இருக்கும் தீய சக்தியை வெளியேற்றி விடும். தீய சக்தியானது வெளியேறிய பின்பு நாம் சன்னிதானத்திற்குள் நுழைவோம். இதனால் கோவிலில் இருக்கக்கூடிய நல்ல அதிர்வலைகளை நம்முடைய உடம்பு சீக்கிரமே கிரகித்துக் கொள்ளும். இதனால் பாசிட்டிவ் எனர்ஜி நமக்குள் அதிவேகமாக செல்லும்.

இனிமேல் கோவிலுக்கு போகும் போது குனிந்து நிலை வாசல் படியை வலது கை விரல்களால் தொட்டு, அந்த விரலை இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் லேசாக வைத்து அழுத்தம் கொடுத்து விட்டு, இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லுங்கள். உங்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் நிறைவாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த அறிவியல் பூர்வமான உண்மையை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். எந்த ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை பின்பற்றுவதற்கு முன்பும் அதற்குப் பின்னால் இருக்கும் நன்மையை நாம் தெரிந்து கொண்டால், அதை ஏளனமாகவும் பேச மாட்டோம். இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று காலப்போக்கில் மறக்கவும் மாட்டோம். அதற்காகத்தான் இந்த பதிவு.

இதையும் படிக்கலாமே: கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை

குறிப்பாக இந்த விஷயத்தை உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளருங்கள். நம்முடைய சாஸ்திர சம்பிரதாயம் அழிந்து போகாது, மறைந்து போகாது. நாளை தலைமுறை நல்லபடியாக வளரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -