ரொம்ப சுலபாக இட்லி பஞ்சு போல உப்பி மெத்தென்று வருவதற்கு இந்த ரகசியத்தை கண்டிப்பாக தெரிஞ்சி வச்சிக்கோங்க! குஷ்பு இட்லி செய்வது இவ்வளவு ஈஸியா?

soft-idli-batter
- Advertisement -

இட்லி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவு வகை ஆகும். தினமும் இட்லி சுட்டால் கூட எல்லா நாளும் இட்லி மெத்தென்று வருவது கிடையாது. இட்லி மாவு இல்லை என்றால் காலையில் என்னடா செய்வது? என்று புலம்பி தள்ளி விடுபவர்களும் உண்டு. ரொம்ப சுலபமாக இட்லி பஞ்சு போல உப்பி மெத்தென்று வருவதற்கு எப்படி இட்லி மாவு அரைக்க வேண்டும்? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒருமுறை குஷ்பூ இட்லி மாவு அரைத்து பாருங்கள், அனைவரும் உங்களை பாராட்டித் தள்ளி விடுவார்கள். மெத்தென்ற இட்லி மாவு எப்படி அரைப்பது? என்பதை இந்த பதிவில் இனி பார்ப்போம்.

குஷ்பு இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 4 கப், முழு உளுந்து – ஒரு கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன், ஜவ்வரிசி – அரை கப், கல் உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

குஷ்பு இட்லி மாவு அரைக்க செய்முறை விளக்கம்:
முதலில் 4 கப் அளவிற்கு இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசி மற்றும் உளுந்து தரமானதாக இருந்தால் இட்லி வெள்ளையாக பஞ்சு போல சுலபமாக உப்பி வரும். உளுந்து பெரிதாக வெள்ளையாக இருக்கும் புதிய உளுந்தாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. மஞ்சளாக சிறிய அளவில் இருக்கும் பழைய உளுந்து உபரி அதிகம் கொடுக்காது. இட்லி அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.

ஜவ்வரிசி மற்றும் வெந்தயத்தையும் இதே போல தனித்தனியாக நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இந்த நான்கு பொருட்களும் சேர்த்து செய்யும் பொழுது இட்லி நன்கு புஸ்சென்று உப்பி வரும். குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து, 8 மணி நேரம் ஊற வைப்பது நல்லது. நன்கு ஊறிய பின்பு கிரைண்டரை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நீங்கள் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு நைஸாக அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின்பு ஊற வைத்துள்ள உளுந்தை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெய் சேர்க்கும் போது உளுந்து நன்கு உபரியாகவும், இட்லி நல்ல வெள்ளை நிறத்திலும் நமக்கு கிடைக்கும். உளுந்து அரைக்கும் பொழுது அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. அவ்வப்போது தண்ணீரை தெளித்து தெளித்து நுரை போல பொங்கி வர ஆட்ட வேண்டும். உளுந்தை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் மிதக்க வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பொங்க ஆட்டி உளுந்தை எடுத்து விடுங்கள். பிறகு ஊற வைத்துள்ள இட்லி அரிசி மற்றும் ஊற வைத்துள்ள ஜவ்வரிசி ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கும் அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது, தேவையான அளவிற்கு நீரைத் தெளித்து தெளித்து ஆட்டி எடுங்கள்.

இப்போது உளுந்த மாவு மற்றும் அரிசி மாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு கரைக்க வேண்டும். கல் உப்பு போட்டுக் கரைக்கும் பொழுது சீக்கிரம் மாவு புளிக்கும். கிரைண்டர் கழுவிய தண்ணீரை மாவுடன் சேர்க்காமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தோசை சுடும் பொழுது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த குளிர்காலத்தில் குறைந்தது எட்டு மணி நேரத்தில் இருந்து, பனிரெண்டு மணி நேரம் வரை நன்கு புளிக்க விட்டு இட்லி, தோசை வார்த்தால் தான் அவை பிரமாதமாக வரும். புசுபுசுவென்று குஷ்பு இட்லி இவ்வளவு சுலபமாக நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -