செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பதே வராது.

deepam

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பதே இல்லாமல், வெறும் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால், சந்தோஷம் திகட்டாதா! சந்தோஷம் சலித்து போய் விடாதா? சந்தோசத்தால் வரும் சந்தோஷத்தை, அனுபவிக்க வேண்டும் என்றால், துன்பம் கட்டாயம் தேவை. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இருப்பினும் இந்த பூலோகத்தில் துன்பத்தை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகமாக வாழ்கின்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க்கையில் துன்பத்தோடு சேர்த்து, இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பவர்கள், வரக்கூடிய கஷ்டத்தில் இருந்து விரைவாக வெளிவரவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள், உங்களுடைய வீட்டில் இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் தீராத கஷ்டங்களுக்கும் கூடிய விரைவில் விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

kamatchi vilakku

நவீன மயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நம்முடைய வேலைப்பளு அதிகமாகவே உள்ளது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இறைவழிபாட்டில் ஈடுபடும் அளவிற்கு நேரம் இருப்பது கிடையாது. வீட்டில் விளக்கு போட்டு, தீபம் ஏற்ற கூட, ஆளில்லாமல் ஓடி ஓடி பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

என்ன செய்வது? காலத்தின் சூழ் நிலை. இதை குறை சொல்லவில்லை. இருப்பினும் வீட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டுமாவது முடிந்தவரை பெண்கள் இந்த முறைப்படி வழிபாடு செய்வது வீட்டிற்கு வரக் கூடிய கஷ்டத்தை தடுத்து நிறுத்தும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

kuthu-vilakku

நம்முடைய வீட்டில் இப்போதெல்லாம் தீபமேற்ற வேண்டும் என்றாலே அதற்கான முன்னுரையை காமாட்சி அம்மன் விளக்கிற்கு தான் கொடுக்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், நம்முடைய வீட்டில் விசேஷங்களுகாகவே பயன்படுத்தும் குத்து விளக்குகள் கிடப்பில் கிடக்கின்றன.

- Advertisement -

விசேஷங்களுக்கு முதலாக முன்னுரிமை கொடுக்கப்படும் குத்து விளக்குகளை, நம்முடைய வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துவது கிடையாது. எந்த வீட்டில் செவ்வாய் கிழமையிலும், வெள்ளிக்கிழமையிலும் குத்துவிளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்கிறார்களோ, அந்த வீட்டிற்கு பஞ்சபூதங்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று, வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் நீங்கி, வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

poojai arai

அந்த காலகட்டத்தில் காமாட்சி அம்மன் விளக்கு புழக்கத்தில் இருந்தாலும், குத்துவிளக்குக்கு அதிகமாக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களிலும் திரி போட்டு எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்து வந்துள்ளார்கள். காலப்போக்கில் நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் குத்துவிளக்கின் பயன்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்து, இறுதியில் குத்துவிளக்கை எல்லாம் விசேஷ தினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த தொடங்கி விட்டோம். நம்முடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

kamatchi-vilakku

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதன் மூலம் வீட்டிற்கு கஷ்டம் வரும் என்று சொல்லவில்லை. முடிந்தவரை உங்களுடைய வீட்டில் செவ்வாய்க்கிழமை காலையிலும் மாலையிலும், வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யும்போது இரண்டு குத்து விளக்கில், ஐந்து முக தீபத்தை ஏற்றி வழிபாடு வைத்துப் பாருங்கள். நீண்ட நாட்களாக தீராமல் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அனுபவபூர்வமாக உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
10 துளசி இலைகள் இருந்தால் போதும் பத்தும் சாத்தியமாகும்! துளசி இலைகள் கொண்டு செய்யும் அற்புத பரிகாரங்கள் நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.