5 நிமிஷத்துல சுவையான இந்த மதுரை கையேந்தி பவன் தண்ணி கார சட்னியை அரைச்சு பாருங்க. சுட சுட இட்லியோட இந்த சட்னி இருந்தா போதும் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே தெரியாது

- Advertisement -

இட்லிக்கு தொட்டுக் கொள்ள சாம்பார்,சட்னி, குருமா, வடை கறி என வகை வகையாக வீட்டில் செய்தாலுமே இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்னி வகைகள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் மதுரை கடை வீதிகளில் இருக்கும் கையேந்தி பவனில் இட்லிக்கு பரிமாறப்படும் இந்த தண்ணி சட்னியை நாம் வீட்டில் எப்படி சுலபமாக அரைப்பது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி அரைப்பதற்கு முன்பாக இரண்டு வெங்காயத்தை தோலுரித்து பெரிதாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அதே போல இரண்டு பெரிய தக்காளியை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் வைத்து சூடானதும், அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஐந்து பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி இரண்டையும் சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பிறகு, அரிந்து வைத்த தக்காளியுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். வெங்காயம் தக்காளியை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து வதக்கிய வெங்காயம் தக்காளி இவை எல்லாம் நன்றாக ஆறிய பிறகு இவைகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் ஊற்றிக் எடுத்து கொள்ளுங்கள். இந்த சட்னி கொஞ்சம் தண்ணீராக இருந்தால் தான் இட்லியில் ஊற்றி சாப்பிடும் போது நன்றாக இருக்கும். எனவே பவுலில் ஊற்றிய பிறகு இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்த உப்பை மட்டும் சரிபார்த்து போதவில்லை என்றால் கொஞ்சமாக சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா

சுடச்சுட இட்லி இந்த சட்னி இருந்தால் போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த சிம்பிளான அதே நேரத்தில் சுவையான மதுரை கையேந்தி பவன் கார சட்னி நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இனி அவசர நேரத்துக்கு இந்த சட்னியை தான் செய்வீங்க.

- Advertisement -