மருதாணி வைத்த ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் செக்க செவேர் என்று சிவக்க வேண்டுமா? அப்படியானால் மருதாணியில் இந்தப் பொருளை சேர்த்து அரைத்து வைத்து பாருங்கள். கோவை பழம் போல் கை சிவந்திருக்கும்.

- Advertisement -

இன்றைய நாகரிக கலாச்சாரத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் மாறி கோன் வைத்துக் கொள்ளும் முறை வந்து விட்டது. அதை விதவிதமாக கை கால்களில் வைத்து இருப்பதை பார்க்க அழகாகத் தான் உள்ளது. ஆனால் இந்த மருதாணியை இலையை பறித்து அரைத்து வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் அல்ல. மருதாணி கையில் வைக்கும் போது கிருமி நாசினியாக செயல் படுகிறது. கைகளில் நகசுத்தி வராமல் தடுக்கும், அது மட்டுமின்றி இது உடல் சூட்டை தணித்து உடலை நல்ல ஒரு நிலையில் வைத்திருக்க உதவி செய்யும். சிலருக்கு மருதாணி எப்படி அரைத்து வைத்தாலும் சிவக்கவே சிவக்காது. அப்படி இல்லாமல் வைத்த உடனே கையில் நன்றாக சிவந்து வர என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மருதாணி இலைகளை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். மருதாணி இலையை பொறுத்தவரையில் பறித்த உடனே அரைத்து வைக்க வேண்டும் பறித்து இலையை பிறகு அரைத்து வைத்தாலும் சிவக்காது, அதே நேரம் அரைத்து வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள் அப்படியும் பயன்படுத்தினாலும் சிவக்காது.

- Advertisement -

இப்போது சுத்தம் செய்த இலைகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் இரண்டு சுற்று விட்டு எடுத்து விடுங்கள். இப்போது இலைகள் எல்லாம் உடைந்தது போல அறைந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு கோலி குண்டு அளவு புளியும், ஐந்து கிராம்பையும் சேர்த்து இன்னும் ஒரு முறை சுற்றி எடுங்கள். அதன் பிறகு அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து விட்டு, அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மை போல அரைத்து கொள்ளுங்கள். அப்போது தான் தண்ணீரும் அதிகமாகி விடாது. மருதாணி வைக்கும் போதும் சரியான பதத்தில் இருக்கும்.

அரைத்த மருதாணியை ஒரு பவுலில் மாற்றி வைத்து கொள்ளுங்கள். அரைத்த உடனே வைக்கக் கூடாது மருதாணி வைக்கும் முன்பு ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். அப்போது தான் நாம் சேர்த்த பொருள்களில் உள்ள சாறு எல்லாம் மருதாணியில் நன்றாக இறங்கி இருக்கும்.

- Advertisement -

மருதாணி வைக்கும் முன்பு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். மருதாணி வைக்கும் போது நல்ல அடர்த்தியாக நிறம் பிடிக்க வேண்டும் என்றால் கைகளில் கோடாரி எண்ணெய் அல்லது யூக்ளிட்ஸ் தைலம் இரண்டில் எது உங்களிடம் இருந்தாலும் அதை கைகளில் நன்றாக தேய்த்துக் அதன் பிறகு மருதாணியை வைத்து கொள்ளுங்கள். மருதாணி வைக்கும் போது சீக்கிரம் காய வேண்டும் என்று ரொம்பவும் மெலிதாக வைப்பார்கள் அப்படி வைக்கக் கூடாது. மருதாணியை பொருத்தவரையில் கொஞ்சம் அதிகமாக எடுத்து கனமாக தான் வைக்க வேண்டும். அப்போது தான் சாறு அதிகமாக கைகளில் இறங்கும். மருதாணி வைத்த பிறகு கொஞ்சம் சர்க்கரை தண்ணீரை எடுத்து மருதாணி வைத்து இடத்தில் எல்லாம் லேசாக மேலே தேய்த்து விடுங்கள். அதே போல் மருதாணி சீக்கிரம் காய வேண்டும் என்று வெயில், பேன் காற்றில் கைகளை வைக்கக் கூடாது. அதுவாகவே நம் உடல் உஷ்ணத்தில் காய்ந்தால் தான் நல்ல சிகப்பு நிறத்தில் பதியும்.

இந்த முறையில் நீங்கள் மருதாணி வைக்கும் போது ஒரு மணி நேரம் வைத்திருந்தால் கூட போதும் நல்ல சிகப்பாக மருதாணி பிடிக்கும் .அதே போல் மருதாணி எடுக்கும் போது நேரடியாக தண்ணீரில் கையை அலசக்கூடாது ஒரு டிஷ்யூ பேப்பரோ, துணியோ வைத்து மருதாணியை எடுத்த பிறகு அதில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட வேண்டும். தேங்காய் எண்ணெய் கை களில் ஊறிய பிறகு வெறும் தண்ணீரில் தான் கழுவ வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவ கூடாது.

இதையும் படிக்கலாமே: இனி வாஷிங் மெஷினை துணி துவைக்க மட்டும் இல்லங்க, சமையல் வேலைக்கு கூட பயன்படுத்தலாம், அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இந்த முறைகளை சரியாக பின்பற்றி வைத்து பாருங்கள். ஒரு மணி நேரம் உங்கள் கையில் மருதாணி இருந்தாலே போதும் அது காய்ந்து உலரும் வரை காத்திருக்க தேவையில்லை. உங்கள் கைகளில் மருதாணி நல்ல சிகப்பாக பிடிக்கும்.

- Advertisement -