இந்த 2 பொடியை அரைத்து வைத்து விட்டால் போதும். சமையலறையில் 2 மாசத்துக்கு தேவையான சமையல் தயார்.

cooking
- Advertisement -

நம்முடைய சமையலுக்கு தேவையான அத்தியாவசியமான இரண்டு பொடிகளை நம் வீட்டிலேயே வறுத்து அரைக்க போகின்றோம். மிகமிக சுலபமான இந்த இரண்டு பொடிகளை அரைத்து வைத்து விட்டால் போதும். சமையலில் பெரிய கஷ்டம் முடிந்துவிடும். முதலாவதாக பார்க்கப் போகும் பொடி கரம் மசாலா பொடி. சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், மஸ்ரூம் கிரேவி, பன்னீர் கிரேவி, வெஜிடபிள் குருமா, வெஜிடபிள் பிரியாணி இப்படி எல்லா வகையான சமையலுக்கும் அளவோடு இந்த ஒரு மசாலா பொடி சேர்த்தால் போதும். கமகமன்னு வாசம் வரும். இதோடு சேர்த்து பார்க்கப் போகும் மற்றொரு பொடி ரசப்பொடி. என்ன சமையல் செய்தாலும், கட்டாயமாக அதோடு சேர்த்து ரசம் வைப்போம். அந்த ரசத்துக்கு தேவையான மணக்க மணக்க மிளகு ரசப்பொடி எப்படி அரைப்பது என்பதை பற்றிய இரண்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக ஒரே பதிவில்.

கரம் மசாலா பொடி செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடானதும் தனியா 4 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், சோம்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1/4 ஸ்பூன், இந்த ஐந்து பொருட்களையும் போட்டு ட்ரையாக பொன் நிறம் வரும் வரை, வாசம் வரும் வரை வறுத்து, தனியாக ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும். அடுத்து அதே கடாயில் ஏலக்காய் 4, அன்னாசி பூ 2, ஜாவித்திரி 1 துண்டு, பட்டை 2 துண்டு, கிராம்பு 5, கல்பாசி மிகக் குறைந்த அளவு, பிரியாணி இலை 4, முந்திரி பருப்பு 6, இந்த பொருட்களை எல்லாம் போட்டு சூடாகும் வரை வறுத்து இதையும் தட்டில் கொட்டி ஆரவைக்கவும்.

- Advertisement -

இறுதியாக அதே கடாயில் வரமிளகாய் 10, கசகசா 1 டேபிள் ஸ்பூன், போட்டு அதையும் வறுத்து தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். அடுத்து 1 கைப்பிடி அளவு கருவேப்பிலைகளை ட்ரையாக வறுத்து இதில் சேர்க்கவும். எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்தால் நமக்கு தேவையான கரம் மசாலா தயார். இதை சைவம் அசைவம் என்று எந்த குழம்பு கிரேவிக்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசம் அவ்வளவு சுவையா சூப்பராக வரும். இரண்டு மாதத்திற்கு காற்று புகாத பாட்டிலில் தண்ணீர் படாமல் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

சுலபமான ரசப்பொடி அரைக்கும் முறை:
இதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 கப் துவரம் பருப்பு, வர மல்லி 1/2 கப், மிளகு 1/2 கப், ஜீரகம் 1/4 கப், போட்டு இந்த நான்கு பொருட்களையும் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்து இந்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். அதே கடாயில் 10 வெந்தயம், வர மிளகாய் 10, கருவேப்பிலை 1 கொத்து போட்டு, வறுத்து இதையும் அந்த பொருட்களோடு சேர்த்து ஆற வைக்கவும்.

- Advertisement -

இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறி வந்ததும் பெருங்காயம் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், சேர்த்து இதை நைசாக பொடியாக அரைத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு மாதம் கெட்டுப் போகாது. ரசம் செய்யும்போது இதிலிருந்து ஒரு ஸ்பூன் பொடி சேர்த்து ரசம் வைத்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: முட்டைகோஸ் வாங்கினால் இப்படி செஞ்சு பாருங்க முட்டைகோஸில் இவ்வளவு அருமையான டிஷ் செய்ய முடியுமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. பிரியாணி வெரைட்டி ரைஸ், சாதம் சப்பாத்தி எல்லாத்துக்குமே பெஸ்ட் சைடு டிஷ்.

நீங்கள் வைக்கும் ரசம் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். எளிமையான இந்த இரண்டு பொடியும் உங்கள் சமையலுக்கு அசத்தலான ருசியை கொடுக்கும். ரெசிபி பிடித்தவர்கள் முயற்சி செய்து தான் பாருங்களேன்.

- Advertisement -