காரசாரமான மிளகாய் சட்னி இப்படி ஒரு முறை வைத்துப் பாருங்கள்! இட்லி தோசைக்கு இனி தொட்டுக் கொள்ள வேறெதுவும் தேவையில்லை என்றாகிவிடும். அவ்வளவு ருசியாக இருக்கும்!

chutney
- Advertisement -

சதா இட்லி தோசை என்றால் கூட பரவாயில்லை ஆனால் அதற்கு சட்னியும் அதே சட்னி தான் என்று கேட்கும் பொழுது தான் நமக்கு காலையில் சாப்பிடும் ஆசையே போய்விடுகிறது. காலை உணவை பொதுவாக தவிர்ப்பது என்பது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை உணவிற்கு இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள என்னடா செய்வது? என்று எண்ணி யோசிக்க வேண்டாம். இப்படி விதவிதமான முறைகளில் சட்னி வகைகளை செய்து பார்த்தால் தின்னத் தின்னத் திகட்டவே செய்யாது. சரி அந்த வகையில் இந்த மிளகாய் சட்னியை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

milagai chutney

‘மிளகாய் சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 10, சின்ன வெங்காயம் – 1 கப், பூண்டு பல் – 10, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு, உப்பு – தேவையான அளவிற்கு, பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு

- Advertisement -

‘மிளகாய் சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். மிளாகாய்கள் கறுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

vanali

வெங்காயம் வதங்கி வந்ததும் அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி பின்னர் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

வதக்கிய பொருட்கள் சூடாக இருக்கும் பொழுதே எப்பொழுதும் சட்னியை மிக்ஸியில் போட்டு அரைக்கக் கூடாது. நன்கு ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். அப்போது தான் சட்னியின் சுவை கூடும். ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கொஞ்சம் சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாற வேண்டியது தான்.

மிளகாய் சட்னி

பெரிய வெங்காயம் பதிலாக இப்படி சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் மிளகாய் சட்னியின் ருசி அலாதியானதாக இருக்கும். எவ்வளவு இட்லி, தோசை கொடுத்தாலும் நமக்கு இன்னும் வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டும். நீங்களும் இது போல் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -